திருமணமான 6 நாளில் புதுப்பெண் மயங்கி பலி| Dinamalar

திருமணமான 6 நாளில் புதுப்பெண் மயங்கி பலி

Added : செப் 16, 2022 | |
கீழ்பென்னாத்துார்:கீழ்பென்னாத்துார் அருகே திருமணமான ஆறே நாட்களில் புதுப்பெண் மயங்கி விழுந்து இறந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்துார் அடுத்த செவரப்பூண்டியை சேர்ந்த சின்னதுரை என்பவர் மகள் சந்தியா 20. இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் குந்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி முருகன் 35 என்பவருக்கும் செப். 9ல் திருமணம் நடந்தது.செப். 12ம் தேதி சந்தியா தன்

கீழ்பென்னாத்துார்:கீழ்பென்னாத்துார் அருகே திருமணமான ஆறே நாட்களில் புதுப்பெண் மயங்கி விழுந்து இறந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்துார் அடுத்த செவரப்பூண்டியை சேர்ந்த சின்னதுரை என்பவர் மகள் சந்தியா 20. இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் குந்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி முருகன் 35 என்பவருக்கும் செப். 9ல் திருமணம் நடந்தது.

செப். 12ம் தேதி சந்தியா தன் கணவர் முருகனுடன் செவரப்பூண்டிக்கு விருந்துக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் சந்தியா வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார்.அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பலியானதாக தெரிவித்தனர். இது குறித்து கீழ்பென்னாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X