பழநி கோயிலில் செப்.26ல் நவராத்திரி விழா துவக்கம்

Added : செப் 16, 2022 | |
Advertisement
பழநி- -பழநி மலை கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட பெரியநாயகி அம்மன் கோயிலில் செப்., 26 முதல் அக்., 4 வரை நவராத்திரி விழா நடக்கிறது.விழாவையொட்டி தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கும். பக்தி இசை, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோயில் வளாகத்தில் நடக்கும். ஒன்பதாம் நாளான அக்., 4ல் மலைக்கோயிலில் மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கும். பின் பராசத்தி வேல்



பழநி- -பழநி மலை கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட பெரியநாயகி அம்மன் கோயிலில் செப்., 26 முதல் அக்., 4 வரை நவராத்திரி விழா நடக்கிறது.விழாவையொட்டி தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கும். பக்தி இசை, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோயில் வளாகத்தில் நடக்கும். ஒன்பதாம் நாளான அக்., 4ல் மலைக்கோயிலில் மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கும். பின் பராசத்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோயிலை அடையும். தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு கோதை மங்கலத்தில் அம்பு போடுதல் நிகழ்வு நடக்கும். பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைந்து, பராசக்தி வேல் மலைக்கோயில் அடைந்த பின் அர்த்த சாம பூஜை நடக்கும். இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X