தென்தமிழகத்தில் 85 சதவீத வீடுகளில்குப்பை பிரித்துக் கொடுக்கப்படுகிறதுபசுமை தீர்ப்பாய கண்காணிப்பு குழு தலைவர் தகவல்| Dinamalar

தென்தமிழகத்தில் 85 சதவீத வீடுகளில்குப்பை பிரித்துக் கொடுக்கப்படுகிறதுபசுமை தீர்ப்பாய கண்காணிப்பு குழு தலைவர் தகவல்

Added : செப் 16, 2022 | |
ஒட்டன்சத்திரம் -''தென் தமிழகத்தில் 85 சதவீதம் வீடுகளில் குப்பைகள் பிரித்து கொடுப்படுகிறது,'' என ஒட்டன்சத்திரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி தெரிவித்தார்.இந்நகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்த பின் ஜோதிமணி கூறியதாவது: வீடுகளில் குப்பைகளைப் பிரித்துக் கொடுப்பது 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். அதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள்
தென்தமிழகத்தில் 85 சதவீத வீடுகளில்குப்பை பிரித்துக் கொடுக்கப்படுகிறதுபசுமை தீர்ப்பாய கண்காணிப்பு குழு தலைவர் தகவல்



ஒட்டன்சத்திரம் -''தென் தமிழகத்தில் 85 சதவீதம் வீடுகளில் குப்பைகள் பிரித்து கொடுப்படுகிறது,'' என ஒட்டன்சத்திரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி தெரிவித்தார்.இந்நகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்த பின் ஜோதிமணி கூறியதாவது: வீடுகளில் குப்பைகளைப் பிரித்துக் கொடுப்பது 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். அதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் அலுவலர்களுடன் இணைந்து பணிபுரிய வேண்டும். வீடுகளிலேயே குப்பைகளை பிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், பிரிக்காமல் விடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனை கழிவுகளை திடக்கழிவுகளுடன் சேர்க்கக்கூடாது. திடக்கழிவுகளை உரமாக மாற்ற முடியும். அது மருத்துவமனை கழிவுகளுடன் சேர்ந்தால் விஷமாக மாறி விடும். அதை எந்த நிலத்திற்கும் உரமாக கூட பயன்படுத்த முடியாது என்றார்.மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிமாறன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, கமிஷனர் தேவிகா, பொறியாளர் சக்திவேல், மேலாளர் உமா காந்தி, துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் கணக்கர் சரவணன், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.முன்னதாக சின்ன குளத்தில் மரக்கன்றுகளை ஜோதிமணி நட்டார். பின் நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. திருமண மண்டபம், ஓட்டல் உரிமையாளர்கள், பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X