ரோட்டோரம் எரியும் குப்பையால் காற்று மாசு: அவதியில் மக்கள்

Added : செப் 16, 2022 | |
Advertisement
திண்டுக்கல் -திண்டுக்கல் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ரோட்டோரம் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் காற்று மாசுபடுவதுடன் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.பழநி பைபாஸ் ரோடு, மதுரை சர்வீஸ் ரோடு, வத்தலகுண்டு ரோடு, பழைய கரூர் ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட ரோடுகளில் தினமும் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதிகளில் கடைகளில் கழிக்கப்படும் பொருட்கள், குப்பை,
ரோட்டோரம் எரியும் குப்பையால் காற்று மாசு: அவதியில் மக்கள்



திண்டுக்கல் -திண்டுக்கல் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ரோட்டோரம் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் காற்று மாசுபடுவதுடன் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.பழநி பைபாஸ் ரோடு, மதுரை சர்வீஸ் ரோடு, வத்தலகுண்டு ரோடு, பழைய கரூர் ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட ரோடுகளில் தினமும் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதிகளில் கடைகளில் கழிக்கப்படும் பொருட்கள், குப்பை, மெடிக்கல் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள் ரோட்டோரம் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. இதனால் ரோடுகளில் கரும்புகை வானளவிற்கு எழுவதால்அவ்வழியாக செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.கண் எரிச்சல், சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல், தீராத தலைவலி, மயக்கம், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக வாகனஓட்டிகள் குற்றம் சாட்டினர். அவ்வப்போது தீ விபத்துகளும் நடக்கின்றன. ரோட்டில் டுவீலர்களில் செல்பவர்களுக்கு எதிரில் வரும் வாகனங்கள் தெரியாதளவிற்கு கரும்புகை பரவுகிறது.


புற்றுநோய் அபாயம்


ஜமால்முகமது, ரவுண்ட் ரோடு, புதுார்: ரோட்டோரம் எரியும் குப்பைகளில் பிளாஸ்டிக் கலந்திருப்பதால் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மண்வளம் பாதிக்கப்படுகிறது. குப்பைகளை தீயிட்டு எரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.


நடவடிக்கை தேவை


வெங்கட் பாண்டியன், பா.ஜ., தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒன்றிய துணைத்தலைவர், செல்லமந்தாடி: ரோட்டில் எழும் கரும்புகையால் உடலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துக்களும் நடக்கின்றன. அதிகாரிகள் ரோட்டோரம் குப்பைகளை தீ வைத்து எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுத்து நிறுத்த வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X