தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பிரிட்டனில் இன்ப சுற்றுலா

Updated : செப் 16, 2022 | Added : செப் 16, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
பென்னிகுயிக் சிலை திறப்பு விழாவுக்காக, அமைச்சர் ஐ.பெரியசாமி யுடன் சென்றிருந்த எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேரும் நாடு திரும்பாமல், லண்டனில் இன்பச் சுற்றுலா மேற்கொண்டு உள்ளனர். கர்னல் பென்னிகுயிக் கட்டிய முல்லை பெரியாறு அணை, தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் என, தென் மாவட்ட விவசாயத்திற்கு பெரிதும் பக்கபலமாக இருக்கிறது.அதை போற்றும் வகையில், தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பென்னிகுயிக் சிலை திறப்பு விழாவுக்காக, அமைச்சர் ஐ.பெரியசாமி யுடன் சென்றிருந்த எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேரும் நாடு திரும்பாமல், லண்டனில் இன்பச் சுற்றுலா மேற்கொண்டு உள்ளனர்.



latest tamil news



கர்னல் பென்னிகுயிக் கட்டிய முல்லை பெரியாறு அணை, தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் என, தென் மாவட்ட விவசாயத்திற்கு பெரிதும் பக்கபலமாக இருக்கிறது.அதை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் பென்னிகுயிக் சிலை அமைக்கப்பட்டது.அதன் திறந்து விழா, 10ம் தேதி நடக்கவிருந்தது. அதில் பங்கேற்க, தென் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, 7ம் தேதி லண்டன் சென்றார்.

அவரை தொடர்ந்து, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார் மற்றும் மதுரை மாவட்ட எம்.எல்.ஏ., ஒருவர் என, நான்கு பேர் லண்டன் சென்றனர். அவர்களுடன், தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், 'மாஜி' எம்.எல்.ஏ.,வுமான தங்கதமிழ்செல்வன் தன் சொந்த செலவில் லண்டன் சென்றார்

.கடந்த 8ம் தேதி பிரிட்டன் ராணி எலிசபெத் மறைந்தார். இதனால், 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால், பென்னிகுயிக் சிலை திறப்பு விழா ரத்தானது. உடனே, அமைச்சர் ஐ.பெரியசாமி தாயகம் திரும்பி விட்டார்.ஆனால், எம்.எல்.ஏ.,க் கள் லண்டனில் இருந்து வர மனமில்லாமல், அங்கு தங்கி இன்பச்சுற்றுலா மேற்கொள்கின்றனர்.


latest tamil news



மதுரையில் நடந்த பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமணம், விருதுநகரில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில் பங்கேற்காமல், எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேரும் பிரிட்டனில் சுற்றுலா மேற்கொண்டுஉள்ளனர்.இது, தென் மாவட்ட கட்சியினர் மத்தியில் சல சலப்பை ஏற்பத்தியுள்ளது.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nisar ahmad -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-202213:44:45 IST Report Abuse
nisar ahmad அவர்கள் சொந்த செலவில் ஊர்சுற்றுகிறார்கள்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
16-செப்-202211:34:36 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தமிழக நிதி நிலைமை எப்படி இருக்கு ?
Rate this:
Cancel
Kannan Chandran - Manama,பஹ்ரைன்
16-செப்-202211:00:53 IST Report Abuse
Kannan Chandran இராணிக்கு வாரிசே இல்லை என்ற ஏதோ ஒரு கொத்தடிமை உ.பி.யின் பேச்சை கேட்டு, அரண்மனையை சுற்றி சுற்றி வருவதாக செய்தி, ஒரு வேளை ஆள் இல்லாத சொத்துனு நினச்சு அரண்மனையை ஆட்டயப்போடலாம்னு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X