போலீஸ் செய்திகள்

Added : செப் 16, 2022 | |
Advertisement
நண்பனை கொன்ற நண்பர்கள் மதுரை: நாராயணபுரம் வெள்ளை மணி 24. நேற்றுமுன்தினம் இரவு அருள்தாஸ்புரம் வைகை கரையோரம் நண்பர்களுடன் மது அருந்தினார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டும், வயிற்றில் கத்தியால் குத்தும் மணியை கொலை செய்தனர். இவர் மீது டி.கல்லுப்பட்டியில் ஒரு கொலை வழக்கு, செல்லுார், திலகர்திடல் ஸ்டேஷன்களில் தலா ஒரு காய வழக்கு உள்ளது. தப்பி ஓடிய
போலீஸ் செய்திகள்



நண்பனை கொன்ற நண்பர்கள்

மதுரை: நாராயணபுரம் வெள்ளை மணி 24. நேற்றுமுன்தினம் இரவு அருள்தாஸ்புரம் வைகை கரையோரம் நண்பர்களுடன் மது அருந்தினார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டும், வயிற்றில் கத்தியால் குத்தும் மணியை கொலை செய்தனர். இவர் மீது டி.கல்லுப்பட்டியில் ஒரு கொலை வழக்கு, செல்லுார், திலகர்திடல் ஸ்டேஷன்களில் தலா ஒரு காய வழக்கு உள்ளது. தப்பி ஓடிய நண்பர்களை செல்லுார் போலீசார் தேடி வருகின்றனர்.பல்பொருள் அங்காடியில் தீமதுரை: கே.கே.நகரில் அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் சந்தோஷ்ராஜ் என்பவர் ஞானமுத்து என்ற பெயரில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 2:30 மணிக்கு மின்கசிவால் கடையில் தீப்பிடித்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத், கூடுதல் அலுவலர் பாண்டி, தல்லாகுளம் நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வீரர்கள் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.4260 புகையிலை பாக்கெட் பறிமுதல்மதுரை: தனக்கன்குளம் அம்பேத்கர் காலனியில் காளிதாசன் 46, பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் திருநகர் போலீசார் சோதனை மேற்கொண்டு 4260 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். காளிதாசன் கைது செய்யப்பட்டார்.கடன் தொல்லையால் தற்கொலைமேலுார்: நொண்டிக்கோவில்பட்டி கார்த்திக்குமார் 34. கருங்காலக்குடியில் குரு மோட்டார்ஸ் டூ வீலர் ஷோ ரூம் பங்குதாரர். மனைவி, 2 மகள்கள் உள்ளனர். கடன் தொந்தரவால் மன உளைச்சலில் இருந்தவர் வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். எஸ்.ஐ., ஜெயம்பாண்டியன் விசாரிக்கிறார்.பணம் திருட்டுமேலுார்: ஆட்டுக்குளம் விவசாயி சோணை 63. நேற்று முன்தினம் சா. நடுப்பட்டியில் உள்ள பேத்தி பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு ரூ.25 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.42.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்திருமங்கலம்: சந்தைப்பேட்டை ஏசுதாஸ் 52. பலசரக்கு கடை வைத்துள்ளார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக கைது செய்யப்பட்டார். போலீசார் சோதனையில் 42.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X