நுாலக திறப்பு விழா

Added : செப் 16, 2022 | |
Advertisement
மதுரை--மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர்கள் சங்கம் (எம்.எம்.பி.ஏ) சார்பில் வழக்கறிஞர் ஜி.எம். விருத்தாசலம் நினைவு நுாலக திறப்பு விழா நடந்தது.உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நுாலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:இன்று நுாலகங்கள் அதிவேகமாக மாற்றமடைந்து வருகிறது. முன்னர் நுாலகத்தில் புத்தகங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இப்போது



மதுரை--மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர்கள் சங்கம் (எம்.எம்.பி.ஏ) சார்பில் வழக்கறிஞர் ஜி.எம். விருத்தாசலம் நினைவு நுாலக திறப்பு விழா நடந்தது.உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நுாலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:இன்று நுாலகங்கள் அதிவேகமாக மாற்றமடைந்து வருகிறது. முன்னர் நுாலகத்தில் புத்தகங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இப்போது இ-புக், ஆடியோ புக் என காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்திருக்கிறது. உலகம் முழுக்க அம்பேத்கர் போற்றப்படுகிறார் என்றால் அதற்கு அவர் தினமும் படித்த புத்தகங்கள் தான் காரணம். இளைஞர்கள் தங்களை முழுவதுமாக அறிந்து கொள்ள புத்தகங்கள் படிக்க வேண்டும், என்றார். எம்.எம்.பி.ஏ., தலைவர் ஸ்ரீனிவாச ராகவன், பொதுச் செயலாளர் நாரயண குமார், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், அரசு வழக்கறிஞர் செந்தில் குமார், வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X