கிரைம் செய்திகள்...

Added : செப் 16, 2022 | |
Advertisement
மகள் மாயம்: தந்தை புகார்சங்கராபுரம்: காட்டு வனஞ்சூரைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், 60; இவரது 27 வயது மகள் பி.காம்., முடித்து வீட்டில் இருந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் பல் மருத்துவமனைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சொக்கலிங்கம் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து


மகள் மாயம்: தந்தை புகார்



சங்கராபுரம்: காட்டு வனஞ்சூரைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், 60; இவரது 27 வயது மகள் பி.காம்., முடித்து வீட்டில் இருந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் பல் மருத்துவமனைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சொக்கலிங்கம் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


முன்விரோத தகராறு: 3 பேர் மீது வழக்கு


கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடியைச் சேர்ந்தவர் கணபதி மனைவி சின்னபிள்ளை, 40; இவரது மகன் செல்வம், 21; இவரை, அதே ஊரைச் சேர்ந்த அசோக்குமார் முன்விரோதம் காரணமாக மொபைலில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். இது குறித்து கேட்ட சின்னபிள்ளையை, அசோக்குமார், இவரது மகன் பூவரசன், ராமசாமி மகன் விஜி ஆகியோர் தாக்கினர். தடுக்க வந்த செல்வத்தை கத்தியால் குத்தினர். புகாரின் பேரில் அசோக்குமார் உட்பட 3 பேர் மீது சின்னசேலம் போலீசார் பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மகள் மாயம்: தந்தை புகார்


கள்ளக்குறிச்சி: கா.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் அழகுபிள்ளை. இவரது 18 வயது மகள் தனியார் கல்லுாரியில் நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அழகுபிள்ளை அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


முன்விரோதம்: 3 பேர் மீது வழக்கு


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெரியார் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல், 41; வீரசோழபுரத்தைச் சேர்ந்தவர் செல்வநாயகம். இருவரும் கள்ளக்குறிச்சியில் அருகருகே பூட்டு சாவி கடை வைத்துள்ளனர். இதில் இவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை சாமுவேலுவை செல்வநாயகம், அவரது தந்தை கோதண்டம், நண்பர் ஜே.ஜே.,நகர் குணா ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின் பேரில் செல்வநாயகம் உட்பட 3 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


கஞ்சா விற்றவர் கைது


விழுப்புரம்: தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சத்யா, வழுதரெட்டி அஜீஸ் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் மோகன், 19; கஞ்சா விற்றது தெரியவந்தது. இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மோகனை கைது செய்து, பைக் மற்றும் 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கரும்பு பயிர் சேதம்: 2 பேர் மீது வழக்கு


விழுப்புரம்: சின்னகள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் ராம்கி, 28; இவர், தனது நிலத்தை, புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த வினோத், 36; என்பருக்கு விற்பனை செய்துள்ளார். கடந்த 8ம் தேதி சிவசங்கரின் தம்பிகள் முருகன், 55; மற்றும் ரமேஷ், 50; ஆகியோர் தங்கள் குடும்ப நிலத்தை எப்படி வாங்கலாம் எனக்கூறி, வினோத் பயிர் செய்திருந்த கரும்பு பயிரை டிராக்டர் மூலம் ஓட்டி சேதப்படுத்தினர். தட்டிக்கேட்ட வினோத்தை தாக்கினர். புகாரின்பேரில், முருகன், ரமேஷ் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை


விழுப்புரம்: தளவானுார் காலனியைச் சேர்ந்தவர் வரதராஜ் மகன் ஜெகன், 27; காணை பேக்கரியில் வேலை செய்து வந்தார். குடிபழக்கமுடைய இவருக்கும், இவரது மனைவி பாக்கியலட்சுமிக்கும் கடந்த 14ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த ஜெகன், அங்குள்ள தனது அண்ணன் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடன் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெகன் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


கோவிலில் திருட்டு


திருவெண்ணெய்நல்லுார்: ஏனாதிமங்கலம் மாரியம்மன் கோவிலில் நேற்று, முன் பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே உண்டியலில் இருந்த காணிக்கை பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த அரை சவரன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது.இதே போன்று அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போயிருப்பதும் தெரியவந்தது. இரு சம்பவம் குறித்தும் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


பைக் திருடன் கைது


திண்டிவனம்: சிங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன். இவர், நேற்று முன்தினம் மயிலம் ரோட்டில் உள்ள ஒரு ேஹாட்டலில் தனது பைக்கை நிறுத்தி விட்டுச் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து, திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியல் உள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர். அதில், திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்த பிந்து முருகன் மகன் அஜய், 24; என்பவர், பைக்கை திருடியது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.


கணவருடன் தகராறு: மனைவி தற்கொலை


விழுப்புரம்: உப்புமுத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி, 26; கொத்தனார். இவரது மனைவி சந்தியா, 23; குடிப்பழக்கம் உடைய திருமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல், குடும்ப செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால், மனமுடைந்த சந்தியா, கடந்த 9ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடன், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X