ஆன்லைனில் கட்டட அனுமதி; நகர ஊரமைப்பு அதிகாரி தகவல்

Added : செப் 16, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கட்டட அனுமதி பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கடலுார் மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் (பொறுப்பு) உமாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் நகர் ஊரமைப்பு துறையில் பொதுமக்கள் எளிதாக மனைப்பிரிவு அனுமதி பெறும் வகையில் கடந்த ஜூன் மாதம் முதல் ஒற்றை சாளர முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறை

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கட்டட அனுமதி பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலுார் மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் (பொறுப்பு) உமாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் நகர் ஊரமைப்பு துறையில் பொதுமக்கள் எளிதாக மனைப்பிரிவு அனுமதி பெறும் வகையில் கடந்த ஜூன் மாதம் முதல் ஒற்றை சாளர முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் ஏராளமானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர்.

அதேபோல் தற்போது கட்டடங்கள் மற்றும் முழுமை திட்டம் விரிவு அபிவிருத்தி திட்டம், நில பயன்மாற்றம் போன்றவை தொடர்பாக விண்ணப்பங்களும் அதே ஒற்றை சாளர முறையில் கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் தேவையான ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்து எளிதாக ஒப்புதல் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X