புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரூ.92 கோடியில் மேம்பாட்டு பணி; ரயில் பயணிகள் குறை தீர்வு குழு தலைவர் பேட்டி

Added : செப் 16, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரூ.92 கோடியில் மேம்பாட்டு பணி விரைவில் துவங்கப்படும் என, பயணிகள் குறை தீர்வு குழுவின் அகில இந்திய தலைவர் கிருஷ்ணதாஸ் கூறினார்.ரயில் பயணிகள் குறை தீர்வு குழுவின் அகில இந்திய தலைவர் கிருஷ்ணதாஸ், நேற்று மாலை புதுச்சேரி ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, ரயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை, பயணியர் ஓய்வறைகள்
புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரூ.92 கோடியில் மேம்பாட்டு பணி; ரயில் பயணிகள் குறை தீர்வு குழு தலைவர் பேட்டி

புதுச்சேரி : புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரூ.92 கோடியில் மேம்பாட்டு பணி விரைவில் துவங்கப்படும் என, பயணிகள் குறை தீர்வு குழுவின் அகில இந்திய தலைவர் கிருஷ்ணதாஸ் கூறினார்.

ரயில் பயணிகள் குறை தீர்வு குழுவின் அகில இந்திய தலைவர் கிருஷ்ணதாஸ், நேற்று மாலை புதுச்சேரி ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, ரயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை, பயணியர் ஓய்வறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், ரயில் பெட்டிகளில் அடிப்படை வசதி உள்ளதா என ஆய்வு செய்தார். ரயில் பயணிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் புதுச்சேரி ரயில் நிலையத்தில் உள்ள பிரச்னைகள், ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதில், பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.

துாய்மையான ரயில் பிரதமரின் கனவுத் திட்டம்.புதுச்சேரி ரயில் நிலையம் உட்பட நாடு முழுதும் 52 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.புதுச்சேரியில் ரயில் நிலைய மேம்பாட்டு பணிக்கு ரூ.92 கோடி நிதி ஒதுக்கி, டெண்டர் கோரப்பட்டது. இதில் 6 டெண்டர்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டு வாரங்களில் டெண்டர் இறுதி செய்யப்படும். புதுச்சேரி ரயில் நிலைய மேம்பாட்டு பணி, மூன்று அல்லது நான்கு வாரங்களில் துவங்கப்பட உள்ளது.அதில், தரைத்தளம் 2,500 சதுர மீட்டர் அளவிலும், முதல் தளம் 2,200 சதுர மீட்டர் பரப்பளவில் இரு, நடைமேடைகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது.

அதில், 7 லிப்ட் மற்றும் 6 எக்ஸலேட்டர், ரெஸ்டாரண்ட், பயணிகள் ஓய்வறை, புட் கோர்ட் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. மேம்பாட்டு பணி முடிவடையும் போது, புதுச்சேரி ரயில் நிலையம் விமான நிலையங்களுக்கு இணையான வசதிகளை பெற்றிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன், பயணிகள் குறை தீர்வுக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், மஞ்சுநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X