ஆக்கிரமிப்பை அகற்றிய பொக்லைன்ஆப்பரேட்டர்கள் மீது கற்கள் வீசி தாக்கு

Added : செப் 16, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் ஆப்பரேட்டர்கள் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருத்தாசலம் நகராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கிறது. கடந்த நான்கு நாட்களாக, மூன்று ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கட்டடங்களை இடித்து அகற்றும் பணி நடந்து

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் ஆப்பரேட்டர்கள் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் நகராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கிறது. கடந்த நான்கு நாட்களாக, மூன்று ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கட்டடங்களை இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. நேற்று மாலை பணி நடந்துகொண்டிருந்தபோது, பொக்லைன் ஆப்பரேட்டர்கள் மீது திடீரென ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.இதனால் ஆப்பரேட்டர்கள், அங்கிருந்து தப்பியோடி, போலீசாரிடம் நடந்ததை கூறினர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கற்களை வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கிருந்தவர்களை போலீசார் எச்சரித்தனர். அப்போது அங்கு திரண்டு வந்த பெண்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணி நடந்தது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X