பிரதமர் மோடியின் 73வது பிறந்த நாளை சேவை வாரமாக கொண்டாட பா.ஜ., முடிவு

Added : செப் 16, 2022 | |
Advertisement
புதுச்சேரி : பிரதமர் மோடியின் 73வது பிறந்த நாளையொட்டி, பா.ஜ.. சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் சேவை வாரமாக கொண்டாடப்பட உள்ளது.புதுச்சேரி பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:பிரதமர் மோடியின் 73வது பிறந்த நாளையொட்டி, வரும் 17ம் தேதிதுவங்கி, அக். 2ம் தேதி வரை 'சேவை வாரம்' என கொண்டாடப்பட உள்ளது.கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் 10 காசநோயாளிகளை

புதுச்சேரி : பிரதமர் மோடியின் 73வது பிறந்த நாளையொட்டி, பா.ஜ.. சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் சேவை வாரமாக கொண்டாடப்பட உள்ளது.

புதுச்சேரி பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:பிரதமர் மோடியின் 73வது பிறந்த நாளையொட்டி, வரும் 17ம் தேதிதுவங்கி, அக். 2ம் தேதி வரை 'சேவை வாரம்' என கொண்டாடப்பட உள்ளது.கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் 10 காசநோயாளிகளை தத்தெடுத்து இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். பா.ஜ., நிர்வாகிகள் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். மாநிலம் முழுதும் ரத்த தான முகாம் நடத்துவது, ஏழை மக்களுக்கு உதவி செய்வது, 5,000 மரகன்று நட்டு ஓராண்டுக்கு பராமரிப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், 30 தொகுதிகளிலும் மருத்துவ முகாம் நடத்துதல், 2 நாட்கள் ஏரி, குளங்களை சுத்தம் செய்தல், புதுச்சேரி கைவினை கலைஞர்களை கண்டறிந்து அவர்களின் பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக கண்காட்சி நடத்துதல் ஆகிய பணிகளும் நடைபெற உள்ளது.மோடியின் 8 ஆண்டு கால சாதனை விளக்கக் கண்காட்சி நடத்துவது. காதி துணிகளை ஊக்குவிப்பது. கலாசார திருவிழா நடத்தி மோடியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X