டவர் மீது லாரி மோதல்; இருவர் உயிர் தப்பினர்

Added : செப் 16, 2022 | |
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் அருகே சாலையோர மின் டவர் மீது லாரி மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பினர்.சென்னையில் இருந்து வேதாரணியத்துக்கு உப்பு ஏற்றுவதற்காக நேற்று அதிகாலை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை பெரம்பலுாரை சேர்ந்த பாண்டியன் என்பவர் ஓட்டிச் சென்றார்.சிதம்பரம் - பி.முடலுார் பைபாஸ் வழியாக தில்லை நாயகபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது,
டவர் மீது லாரி மோதல்; இருவர் உயிர் தப்பினர்

சிதம்பரம் : சிதம்பரம் அருகே சாலையோர மின் டவர் மீது லாரி மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து வேதாரணியத்துக்கு உப்பு ஏற்றுவதற்காக நேற்று அதிகாலை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை பெரம்பலுாரை சேர்ந்த பாண்டியன் என்பவர் ஓட்டிச் சென்றார்.சிதம்பரம் - பி.முடலுார் பைபாஸ் வழியாக தில்லை நாயகபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த லாரி, வலது பக்கம் சாலையோரம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மின் டவர் மீது மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது.விபத்து நடந்த பகுதிக்கு மிக அருகில் உயர் மின்னழுத்த கம்பம் இருந்தது.

அதில், மோதியிருந்தால் லாரி எரிந்து உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்ட வசமாக டிரைவர் மற்றும் உடன் வந்த கிளீனர் எவ்வித பாதிப்புமின்றி தப்பினர்.தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X