வேகமாக பரவும் காய்ச்சலால் சிறுவர்கள் அதிகம் பாதிப்பு! சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்

Added : செப் 16, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் காய்ச்சலால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப் படுவதால், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.புதுச்சேரியில் திடீரென ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த இரு
Puducherry, viral fever, குழந்தைகள், ப்ளூ காய்ச்சல், வைரஸ் காய்ச்சல்,  fever, children, flu fever, புதுச்சேரி,  காய்ச்சல்,

புதுச்சேரி : புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் காய்ச்சலால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப் படுவதால், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

புதுச்சேரியில் திடீரென ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த இரு வாரங்களாக காய்ச்சலால் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.



பரவல் அதிகரிப்பு


பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அதனால், சிறுவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போதிலும், மாத்திரை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல்கின்றனர். இதனால், பிற மாணவர்களுக்கும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.


இயக்குநர் விளக்கம்


காய்ச்சல் பரவல் குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் மழைக்காலத்தில் பொதுவாக பரவும் வைரஸ் (ப்ளூ) காய்ச்சல் தான் தற்போது பரவி வருகிறது.கொரோனா தொற்று பரவலின்போது ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மழைக்கால காய்ச்சல் குறைவாக இருந்தது.

தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் முக கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளி கடை பிடிக்காமல், கூட்ட நெரிசலில் சென்று வருகின்றனர். அதனால் தற்போது மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.



சிறப்பு வார்டுகள்


இந்நிலையை சமாளிக்க, சுகாதாரத் துறை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியிலும், ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சலுக்கான பிரத்யேக வெளிப்புற மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை வார்டுகள் 24 மணி நேரமும் தற்போது இயங்கி வருகின்றன.காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் உள்ளனர்.

தேவையான மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் உள்ளது.அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வெளிப்புற சிகிச்சை அளிக்க பிரத்யேக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மழைக் காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்களப் பணியாளர்கள் முடுக்கி விடப் பட்டுள்ளனர்.



தடுப்பது எப்படி?


நோய் பரவலை தடுத்திட பொதுமக்கள் குடிநீரை கொதிக்க வைத்து, வடிகட்டி பருக வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். எப்போதும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.வீட்டில் எவரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அவர் கண்டிப்பாக முககவசம் அணிந்து கொண்டு, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லக் கூடாது.

குறிப்பாக கூட்டம் உள்ள பகுதிக்கு செல்லக் கூடாது. வெளி உணவை தவிர்க்க வேண்டும். வீட்டைச்சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மழைக்காலத்தில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் பற்றி மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் காய்ச்சலில் இருந்து ஒரு வாரத்தில் விடுபடலாம். இவ்வாறு சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.


நோயின் அறிகுறி

திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, கடும் காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு. குறிப்பாக கை, கால் மூட்டுகளில் கடும் வலி ஆகியவை இந்த காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X