மாணவன் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிதியுதவி

Added : செப் 16, 2022 | |
Advertisement
காரைக்கால் : காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவன் குடும்பத்திற்கு திருமுருகன் எம்.எல்.ஏ., ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.காரைக்கால் நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் -மாலதி தம்பதியின் மகன் பாலமணிகண்டன்,13. தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிந்து வந்தார்.படிப்பு உள்ளிட்டவற்றில் போட்டியாக இருந்ததால், கடந்த 3ம் தேதி சக
காரைக்கால், பள்ளி மாணவன், திருமுருகன் எம்எல்ஏ, Karaikal, School Student, Thirumurugan MLA,

காரைக்கால் : காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவன் குடும்பத்திற்கு திருமுருகன் எம்.எல்.ஏ., ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

காரைக்கால் நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் -மாலதி தம்பதியின் மகன் பாலமணிகண்டன்,13. தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிந்து வந்தார்.படிப்பு உள்ளிட்டவற்றில் போட்டியாக இருந்ததால், கடந்த 3ம் தேதி சக மாணவியின் தாய் குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவர் பாலமணிகண்டனை கொலை செய்தார்.

மறைந்த பாலமணிகண்டன் படத்திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் நடைபெற்றது. எம்.எல்.ஏ., திருமுருகன், பாலமணிகண்டன் உருவப் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தி, பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.மேலும், மாணவரின் குடும்பத்திற்கு திருமுருகன் எம்.எல்.ஏ., தனது சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X