'கொரோனாவை எதிர்கொள்வதில் உலக நாடுகள் பெரும் தோல்வி'

Updated : செப் 16, 2022 | Added : செப் 16, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி-'கொரோனா வைரஸ் பரவலின்போது அதை எதிர்கொள்வதில், உலக நாடுகள் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன. அதிக மரணங்களை தடுத்திருக்க முடியும்; ஐ.நா., நீடித்த வளர்ச்சி இலக்கை எட்டுவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என, ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த 'லான்செட்' என்ற மருத்துவ இதழின் கொரோனா கமிஷன், சர்வதேச அளவில் கொரோனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி-'கொரோனா வைரஸ் பரவலின்போது அதை எதிர்கொள்வதில், உலக நாடுகள் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன. அதிக மரணங்களை தடுத்திருக்க முடியும்; ஐ.நா., நீடித்த வளர்ச்சி இலக்கை எட்டுவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என, ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.latest tamil news


ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த 'லான்செட்' என்ற மருத்துவ இதழின் கொரோனா கமிஷன், சர்வதேச அளவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தது.நிபுணர்கள் ஆய்வு

உலகின் முன்னணி 28 நாடுகளைச் சேர்ந்த பொது கொள்கை, சர்வதேச நிர்வாகம், தொற்றியல், தடுப்பூசி, பொருளாதாரம், சர்வதேச நிதி உள்ளிட்ட துறைகளின் நிபுணர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.இவற்றின் அடிப்படையில் லான்செட் கொரோனா கமிஷன் விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலின் துவக்கத்தில் இருந்து, இன்று வரை, உலக நாடுகள் அதை எதிர்கொள்வதில் பெரும் தோல்வியை சந்தித்து உள்ளன.வைரஸ் பரவலை தடுப்பது, வெளிப்படைதன்மை, அடிப்படை பொது சுகாதார நடைமுறைகள், சர்வதேச ஒத்துழைப்பு என பல அம்சங்களில் ஏற்பட்ட தோல்விகளால், 1.77 கோடி பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவற்றை தவிர்த்திருக்க முடியும்.கொரோனா வைரஸ் பரவல் துவங்கியதும், அதை எதிர்கொள்வதில் பெரும்பாலான நாடுகள் உடனடி நடவடிக்கையில் இறங்கவில்லை.

ஏற்கனவே பொது சுகாதார கட்டமைப்பு வசதி மோசமாக உள்ள நாடுகளில், கொரோனாவால் அதிகம் பாதிக்கக் கூடியவர்களை அடையாளம் கண்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை.முதலில் இந்த கொரோனா வைரஸ் பரவலை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பதில், உலக சுகாதார அமைப்பு தோல்வி அடைந்தது. இது, மிக தாமதமாக உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும், தொற்று பரவலை தடுப்பதில் சர்வதேச அளவிலான ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதிலும் உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது.


latest tamil news

ஒத்துழைப்பு இல்லை

சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் பொய் செய்திகள், மக்களை பீதி ஏற்படுத்தும் செய்திகள் வெளியானது, பிரச்னையை தீவிரப்படுத்தியது.தடுப்பூசி விவகாரத்திலும், சர்வதேச அளவில் ஒத்துழைப்பு இல்லை. தடுப்பூசி தயாரித்துள்ள நாடுகளுடன், அதன் தொழில்நுட்ப தகவல்களை மற்ற நாடுகளுக்கு பகிர்ந்து கொள்ளவில்லை.இவ்வாறு தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் பெரும் தோல்வி அடைந்து விட்டன.இதனால், பல நாடுகள் பொருளாதார பாதிப்புகளை சந்தித்ததுடன், 2030ம் ஆண்டுக்கான ஐ.நா.,வின் நீடித்த வளர்ச்சி இலக்கை எட்டுவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202216:37:20 IST Report Abuse
சந்திரசேகர் இன்னும் கோரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசி மட்டும் தான் இருக்கிறது.தடுப்பூசி போட்டால் கொரோனா வராது என்று எத்தனையோ பேர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரும்.ஆனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால் கொரோனா வந்தால் பழைய சளி ஜீரம் மாத்திரையை தவிர வேறொன்றுமில்லை. உடல் வீக்கானவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்
Rate this:
Cancel
16-செப்-202210:48:49 IST Report Abuse
ஆரூர் ரங் எண்ணிக்கை அளவில் மட்டுமல்ல தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சதவீதமும் நமது நாட்டில்தான் அதிகம் .👌 அதனால் தான் இவ்வளவு மக்கள் நெருக்கமுள்ள நம்நாட்டில் கட்டுக்குள் வந்து பொருளாதாரமும் வேகமாக சீரடைந்து வருகிறது . இன்னும் பல வளர்ந்த நாடுகளில் பாதி பேருக்கு கூட தடுப்பூசி போட முடியவில்லை. அரசுகளின் தோல்வி அது.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
16-செப்-202210:27:16 IST Report Abuse
jayvee உலக சுகாதார மைய்யத்தின் தலைவரை குறை சொல்ல தைரியம் இல்லாத ரிப்போர்ட்.. பல நாடுகளை மிரட்டி தங்களது தடுப்பூசிகளை விற்ற அமெரிக்காவை குறை சொல்ல வக்கில்லை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X