கனியாமூர் பள்ளி கலவரம்; 4 பேர் மீது குண்டாஸ்| Dinamalar

கனியாமூர் பள்ளி கலவரம்; 4 பேர் மீது 'குண்டாஸ்'

Added : செப் 16, 2022 | |
கள்ளக்குறிச்சி : கனியாமூர் பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர், குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட, 2 பெண்கள், 26 சிறுவர்கள் உட்பட 399 பேர் கைது செய்யப்பட்டனர்.கலவரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் 'வீடியோ' பதிவுகளை வைத்து, கலவரக்காரர்களை
கனியாமூர் பள்ளி கலவரம்; 4 பேர் மீது 'குண்டாஸ்'

கள்ளக்குறிச்சி : கனியாமூர் பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர், குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.



கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட, 2 பெண்கள், 26 சிறுவர்கள் உட்பட 399 பேர் கைது செய்யப்பட்டனர்.கலவரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் 'வீடியோ' பதிவுகளை வைத்து, கலவரக்காரர்களை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்து வருகின்றனர்.



இதில், போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்த, சின்னசேலம் அடுத்த தொட்டியம் லட்சுமணன் மகன் மணி, 44; பள்ளி பஸ் மற்றும் மாணவர்களின் சான்றிதழ்களுக்கு தீ வைத்த, சின்னசேலம் வீ.மாமாந்துார் ராமர் மகன் லட்சாதிபதி, 34; போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசிய உலகங்காத்தான் லட்சுமணன் மகன் சரண்ராஜ், 34; சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார் அன்வர்பாஷா மகன் சர்புதீன், 38; ஆகியோர் கைது செய்யப்பட்டு, வேலுார் மற்றும் கடலுார் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.



இந்த 4 பேரும் வெளியே வந்தால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். எனவே, குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., பகலவன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.கலெக்டர் ஷ்ரவன்குமார், 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, சிறையில் உள்ள 4 பேரிடமும் அதற்கான ஆணையை போலீசார் வழங்கினர். பள்ளி கலவரம் தொடர்பாக இதுவரை 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X