மகளிர் திட்ட ஊழியர்கள் 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு

Added : செப் 16, 2022 | |
Advertisement
கடலுார் : விருத்தாசலம் மகளிர் திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 3 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் சிக்கியது தொடர்பாக உதவி திட்ட அலுவலர் உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகளிர் திட்ட வட்டார அலுவலகம் இயங்கி வருகிறது.இங்கு, உதவி திட்ட அலுவலராக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சீனுவாசன்

கடலுார் : விருத்தாசலம் மகளிர் திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 3 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் சிக்கியது தொடர்பாக உதவி திட்ட அலுவலர் உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகளிர் திட்ட வட்டார அலுவலகம் இயங்கி வருகிறது.இங்கு, உதவி திட்ட அலுவலராக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சீனுவாசன் மனைவி சித்ரா, 50; வட்டார இயக்க மேலாளராக கடலுாரைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி கலைச்செல்வி, 38; பணிபுரிகின்றனர்.இவர்களுக்கு, இங்கு பணிபுரியும் சமுதாய நல பயிற்றுனர்கள் வங்கி மூலம் பெறப்பட்ட சம்பள பணத்தின் ஒரு பகுதியை லஞ்சமாக கொடுக்கப் போவதாக கடலுார் மாவட்ட லஞ்ச போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.அதன்பேரில், மகளிர் திட்ட வட்டார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத 3 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சித்ரா, கலைச்செல்வி மீது போலீசார் நேற்று, வழக்குப் பதிந்தனர்.மேல் விசாரணைக்காக பறிமுதல் செய்த பணத்தை கடலுார் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.இவ்வழக்கு தொடர்பாக விருத்தாசலம் மண்டல உதவி திட்ட அலுவலர் முத்துபாண்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார், கடலுார் அழைத்து வந்து விசாரித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X