சுவர் இடிந்து 4 ஆடுகள் பலி

Added : செப் 16, 2022 | |
Advertisement
பெண்ணாடம் : கருவேப்பிலங்குறிச்சி ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் கலைவாணன் மனைவி மலர்கொடி, 57. கூலித்தொழிலாளி. இவர் தமிழக அரசு வழங்கிய 4 விலையில்லா ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மாலை ஆடுகளை மேய்த்து விட்டு, அருகிலுள்ள பழைய மேற்கூரை இல்லாத கான்கிரீட் வீட்டின் அருகே கட்டினார்.நேற்று இரவு 7:00 மணியளவில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து

பெண்ணாடம் : கருவேப்பிலங்குறிச்சி ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் கலைவாணன் மனைவி மலர்கொடி, 57. கூலித்தொழிலாளி. இவர் தமிழக அரசு வழங்கிய 4 விலையில்லா ஆடுகள் வளர்த்து வருகிறார்.

நேற்று மாலை ஆடுகளை மேய்த்து விட்டு, அருகிலுள்ள பழைய மேற்கூரை இல்லாத கான்கிரீட் வீட்டின் அருகே கட்டினார்.நேற்று இரவு 7:00 மணியளவில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் மலர்கொடி காயமடைந்ததார். அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணி தலைமையிலான வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய 4 ஆடுகளை இறந்த நிலையில் மீட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X