தினமும் கொலை, கொள்ளை, பலாத்காரம்!

Updated : செப் 16, 2022 | Added : செப் 16, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
கோவை: தி.மு.க.,வை வெற்றி பெற வைத்த பொதுமக்கள், தற்போது விழி பிதுங்கி நிற்பதாக, கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக, பேரவை மாநில பொது செயலாளர் தேவராஜ் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்ததும், பல நல்ல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொடுப்பார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக

கோவை: தி.மு.க.,வை வெற்றி பெற வைத்த பொதுமக்கள், தற்போது விழி பிதுங்கி நிற்பதாக, கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, பேரவை மாநில பொது செயலாளர் தேவராஜ் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்ததும், பல நல்ல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொடுப்பார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது எதை எல்லாம் எதிர்த்தாரோ, அவற்றை இப்போது அவரே செய்து கொண்டு இருப்பது வேதனை.



latest tamil news




கடந்த ஆட்சியில் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என இருந்த தி.மு.க., கூட்டணி கட்சிகள், அவர்களின் கஜானா நிரம்பியதால் எங்கே உள்ளனர் என தெரியவில்லை. தி.மு.க.,வை வெற்றி பெற வைத்த பொதுமக்கள், தற்போது விழி பிதுங்கி நிற்கின்றனர். பள்ளி மாணவர்கள் மது அருந்துவது, போதை பொருள் பயன்பாடு, ஆசிரியர்களை மாணவர்கள் அடிப்பது, மாணவர்கள் தற்கொலை, தினமும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என்ற செய்திகளை பார்க்கவே பயமாக உள்ளது.

மக்களின் வரிபணத்தை இலவசம், நினைவு சின்னம் என்று கோடி, கோடியாய் செலவழிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயிகளுக்கு நெல் பாதுகாப்புக்கு தார்பாய் வாங்கி கொடுக்கும் பணத்தில், தகர கொட்டாய் அமைத்து தந்தால், மூட்டைகளை நனையாமல் பார்த்துக் கொள்வார்கள். இதற்கு தேவையில்லாமல் கோடிகளை செலவு செய்வது கண்டிக்கத்தக்கது.

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, மதுக்கடைகளை அதிக நேரம் திறந்து வைத்து மது குடிக்க வைப்பது எல்லாம் மக்களை பாதிக்கிறது. இவற்றை எல்லாம், தமிழக அரசு கவனத்தில் எடுத்து தமிழகத்தை காக்கவில்லை என்றால் அனைவரையும் ஒருங்கிணைத்து, போராட வேண்டிய சூழல் ஏற்படும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
16-செப்-202217:32:37 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இன்னுமா எதிர்கட்சிகள் போராட்டத்தை தொடங்கவில்லை?
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
16-செப்-202214:36:22 IST Report Abuse
Vena Suna ஜெயலலிதா தீய சக்திகளை கட்டுப்படுத்தி வைத்தார். இவன் ஆட்சியில் ஒன்றும் இல்லை.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
16-செப்-202212:48:53 IST Report Abuse
அசோக்ராஜ் தீயசக்தி என்ற பெயர் நிரந்தரப் பட்டவருக்கு எப்படி நல்ல பெயர் பெற்றுத் தருவது என்ற நல்லெண்ணத்துடன் அவரை விடப் படு கேவலமாக ஆட்சி செய்யும் மகன். அப்பவே பரவாயில்லை என்று சொல்ல வைத்த மகன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X