புதிய மணல் குவாரிகள் 15 இடங்களில் திறப்பு?

Updated : செப் 16, 2022 | Added : செப் 16, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் 15 புதிய மணல் குவாரிகளை திறக்க, அரசு முடிவு செய்துள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், ஆற்று மணலுக்கு மாற்றாக, கல் குவாரிகளில் கிடைக்கும், 'எம் - சாண்ட்' பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக, 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எம் - சாண்ட் தயாரிப்புக்காக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி
சென்னை, மணல் குவாரி, தமிழக அரசு, Chennai, Sand Quarry, TN Govt,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழகத்தில் 15 புதிய மணல் குவாரிகளை திறக்க, அரசு முடிவு செய்துள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில், ஆற்று மணலுக்கு மாற்றாக, கல் குவாரிகளில் கிடைக்கும், 'எம் - சாண்ட்' பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக, 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எம் - சாண்ட் தயாரிப்புக்காக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் மலைகள் அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. இதேநிலை தொடர்ந்தால், மலைகள் முழுமையாக காணாமல் போகும் நிலை ஏற்படும்.


latest tamil news


எனவே, எம் - சாண்ட் விற்பனையுடன், ஆற்று மணல் விற்பனையை தொடர, அரசு முடிவெடுத்துள்ளது. மணல் விற்பனை வாயிலாக, அரசின் வருவாயை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, மதுரை, வேலுார், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில், தலா ஒரு இடத்தில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து, திருவள்ளூர், கடலுார், விழுப்புரம், வேலுார், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், 15 இடங்களில் புதிதாக மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக, சுற்றுச்சூழல் துறை அனுமதி கோரப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaraj - Dharmapuri ,இந்தியா
17-செப்-202208:13:58 IST Report Abuse
Sivaraj திருட்டு திமுக ஆட்சியில் இதுதான் நடக்கும் இயற்கை வளங்கள் அழிந்தால் வரும் தலைமுறை என்ன ஆகும் இந்த இயற்கை ஆர்வலர்கள் எங்க போனாங்களா
Rate this:
Cancel
Sivaraj - Dharmapuri ,இந்தியா
17-செப்-202208:12:10 IST Report Abuse
Sivaraj திருட்டு திமுக ஆட்சியில் இதுதான் நடக்கும் இயற்கை வளங்கள் அழிந்தால் வரும் தலைமுறை என்ன ஆகும் இந்த இயற்கை ஆர்வலர்கள் எல்லாம் எங்க போனாங்களா ரோடு போடறன்ற பேர்ல் அனைத்து மரங்களும் வெட்டபடுகின்றன ஆண்டவா இதற்கு தீர்வே இல்லையா ?
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
16-செப்-202217:27:54 IST Report Abuse
ram ஐந்து வருடங்கள் திருட்டு திமுக ஆட்சியில் எதுவும் மிஞ்ச போறதில்லை, மணல் ஆறு மலைகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X