'காப்பர்' விலை மும்மடங்கு உயர்வுதீர்வு காண வலுக்கும் கோரிக்கை

Added : செப் 16, 2022 | |
Advertisement
கோவை : ''காப்பர் விலை மும்மடங்கு உயர்ந்திருப்பதால், 10 லட்சம் சிறு, குறு தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகும்,'' என, 'மேக் இந்தியா' நிறுவன தலைவர் கூறினார்.கோவையில் மேக் இந்தியா நிறுவன தலைவர் மாணிக்கம் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, 2018ல் ஒரு கிலோ காப்பர், 300 ரூபாயாக இருந்தது. இன்று, 750 ரூபாயை தாண்டி விட்டது. இதனால், காப்பர் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து



கோவை : ''காப்பர் விலை மும்மடங்கு உயர்ந்திருப்பதால், 10 லட்சம் சிறு, குறு தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகும்,'' என, 'மேக் இந்தியா' நிறுவன தலைவர் கூறினார்.

கோவையில் மேக் இந்தியா நிறுவன தலைவர் மாணிக்கம் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த, 2018ல் ஒரு கிலோ காப்பர், 300 ரூபாயாக இருந்தது. இன்று, 750 ரூபாயை தாண்டி விட்டது. இதனால், காப்பர் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. நம் நாட்டின் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஆண்டுக்கு, 60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.
அதே காப்பர் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். விலை உயர்வால் நாட்டில், 10 லட்சம் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு, ஒரு கோடி தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவையில் மட்டும், 300 தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை இல்லை.
தமிழகத்தில் வெட்கிரைண்டர், பம்ப்செட் போன்ற தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஆண்டுக்கு, ஒரு லட்சம் டன் காப்பர் பயன்படுத்துகிறோம். கோவையில் மட்டும், 60 ஆயிரம் டன் பயன்படுத்தப்படுகிறது. மின்சார வாகனங்கள் மிக அதிக அளவில் உற்பத்தியாக உள்ளது; இதற்கு காப்பர் மிக அவசியம்.தமிழகத்தில் காப்பர் தொழிற்சாலை துவங்கி, அதில் உற்பத்தி ஆரம்பிக்க நான்கு ஆண்டுகள் ஆகும். இதை கருத்தில் கொண்டு காப்பர் தயாரிக்கும் ஆலையிலிருந்து வெளியேறும் மாசுக்கு நாங்கள் தீர்வு கண்டறிந்துள்ளோம்.
ஏற்கனவே உள்ள 'ஸ்டெர்லைட்' காப்பர் தொழிற்சாலை கடந்த நான்கு ஆண்டுகளாக முடங்கியுள்ளது.புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நிலத்தடி நீர், காற்று மாசு இல்லாமல், உடனடியாக துவக்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது நமக்கு கிடைக்க வேண்டிய காப்பர் வழக்கம் போல் கிடைக்கும். அதற்கான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் இறங்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X