பவுண்டரிகளின் பங்களிப்பு அவசியம் : கூடுதல் தலைமை செயலர் பேச்சு| Dinamalar

பவுண்டரிகளின் பங்களிப்பு அவசியம் : கூடுதல் தலைமை செயலர் பேச்சு

Added : செப் 16, 2022 | |
கோவை : ''நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில், 25 சதவீதம் பங்களிக்க பவுண்டரி துறை அதன் திறன்களை மேம்படுத்த வேண்டும்,'' என, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா பேசினார்.கோவையில் பவுண்டரி டெவலப்மென்ட் பவுண்டேசன் சார்பில் சர்வதேச பவுண்டரி கண்காட்சி, அவிநாசி ரோடு, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது. இதில், கோவையிலிருந்து, 60 நிறுவனங்கள் உட்பட
பவுண்டரிகளின் பங்களிப்பு அவசியம் : கூடுதல் தலைமை செயலர் பேச்சு



கோவை : ''நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில், 25 சதவீதம் பங்களிக்க பவுண்டரி துறை அதன் திறன்களை மேம்படுத்த வேண்டும்,'' என, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா பேசினார்.

கோவையில் பவுண்டரி டெவலப்மென்ட் பவுண்டேசன் சார்பில் சர்வதேச பவுண்டரி கண்காட்சி, அவிநாசி ரோடு, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது. இதில், கோவையிலிருந்து, 60 நிறுவனங்கள் உட்பட ஜெர்மனி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 180 முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.


தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது:


தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஒரு கடன் வழங்கும் அமைப்பு மட்டுமல்ல; சிறு, குறு, நடுத்தர மற்றும் இதர தொழில் நிறுவனங்களுக்கு 'இண்டஸ்ட்ரி 4.0' தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்குகிறது. பல அமைப்புகளுடன் கூட்டாண்மை திட்டங்களை கொண்டுள்ளது.இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர் சங்கத்துடன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கூட்டு சேர்ந்துள்ளது.


தற்போதே, மத்திய அரசு பாதுகாப்பு தொடர்பான கூறுகளை உள்நாட்டிலேயே உருவாக்கிட பெரும் உறுதியோடு உள்ளது.பவுண்டரிகள் நம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன. நம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், 25 சதவீதம் பங்களிக்க, பவுண்டரி துறை அதன் திறன்களை மேம்படுத்த வேண்டும்.


இவ்வாறு, அவர் பேசினார்.



சக்தி குரூப் தலைவர் மாணிக்கம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக(டிட்கோ) இயக்குனர் நந்தினி ரங்கசாமி,பவுண்டரி டெவலப்மென்ட் பவுண்டேசன் தலைவர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X