ஆரோவில்லில் இடம் பிரச்னை: மூன்றாம் நாளாக போராட்டம்

Added : செப் 16, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
விழுப்புரம் : ஆரோவில்லில் இடம் தொடர்பான பிரச்னையில், வெளிநாட்டினர் முற்றுகையிட்டு மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர், சர்வதேச நகரமான ஆரோவில்லில், இடையன்சாவடி - குயிலாப்பாளையம் செல்லும் சாலையில் 2 ஏக்கர் 82 சென்ட் நிலம் வாங்கியுள்ளார்.இதில், ஒரு பகுதியில் சுற்றுச் சுவர் கட்டி, விவசாயம் செய்து
ஆரோவில்லில் இடம் பிரச்னை: மூன்றாம் நாளாக போராட்டம்



விழுப்புரம் : ஆரோவில்லில் இடம் தொடர்பான பிரச்னையில், வெளிநாட்டினர் முற்றுகையிட்டு மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர், சர்வதேச நகரமான ஆரோவில்லில், இடையன்சாவடி - குயிலாப்பாளையம் செல்லும் சாலையில் 2 ஏக்கர் 82 சென்ட் நிலம் வாங்கியுள்ளார்.இதில், ஒரு பகுதியில் சுற்றுச் சுவர் கட்டி, விவசாயம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, மற்றொரு இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து வேலி அமைத்தார்.
அந்த இடம் ஆரோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது எனக்கூறி, ஆரோவில் வாசிகளான வெளிநாட்டினர், இரண்டு நாட்களாக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், சுப்ரமணியன், பணியாட்கள் மூலம், நேற்று காலை வேலி அமைக்க 'பில்லர்' போட்டார். அப்போது, ஆரோவில் பகுதியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், வேலி அமைக்க விடாமல் தடுத்தனர். இதனால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
'ஆரோவில் கமிட்டிக்கு சொந்தமான இடம் இது. இதை விட்டுக் கொடுக்க மாட்டோம்' எனக்கூறி, வெளிநாட்டினர், காலை 7:00 மணிக்கு தர்ணாவில் ஈடுபட்டனர்.ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். பணியை நிறுத்தினால் மட்டுமே கலைந்து செல்வதாக அவர்கள் கூறினர்.
ஆரோவில் நிர்வாக குழுவைச் சேர்ந்த நரேன் என்பவரை, போலீசார் வரவழைத்து பேச்சு நடத்தினர்.ஆரோவில் அறக்கட்டளைச் செயலர் முன்னிலையில் பேச்சு நடத்திய பிறகு, பணியை தொடர்வது குறித்து முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, 11:30 மணிக்கு அவர்கள் கலைந்து சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
18-செப்-202209:25:20 IST Report Abuse
Manguni புதுச்சேரியிலும் உடன்பிறப்புகள் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்களா. பாழே பாழே. விட்டால் இந்தியா முழுவதும் விற்று விடுவார்கள் நமது உடன்பிறப்புகள். பெரியார் மண். திராவிட மண்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X