கரூர் மாவட்டத்தில் 5.77 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு: கலெக்டர்

Added : செப் 16, 2022 | |
Advertisement
கரூர்: 'பசுமை தமிழ்நாடு' திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில், 5.77 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகில், ஓந்தாம்பட்டியில் ''பசுமை தமிழ்நாடு'' திட்டத்தின் கீழ் தனியார் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடக்க விழா நடந்தது. இதை கலெக்டர் பிரபுசங்கர்


கரூர்: 'பசுமை தமிழ்நாடு' திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில், 5.77 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகில், ஓந்தாம்பட்டியில் ''பசுமை தமிழ்நாடு'' திட்டத்தின் கீழ் தனியார் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடக்க விழா நடந்தது. இதை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கிவைத்து கூறியதாவது:
'பசுமை தமிழ்நாடு'
திட்டத்தில், 2022-2023ம் ஆண்டு தமிழகம் முழுவதும், 1.77 கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில், 5 லட்சத்து, 77ஆயிரத்து, 500 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விவசாய நிலங்களில் மட்டும் நடுவதற்கு, 3 லட்சத்து, 15 ஆயிரம் மரக்கன்றுகள் வனத் துறையினரால் நர்சரிகளில் வளர்க்கப்பட்டு, தயாராக உள்ளது.
இவற்றை பெற்று நட விரும்புவோர், விலையில்லாமல் மரக் கன்றுகளை வாங்கி கொள்ளலாம். வனத்துறையினர் மரக்கன்றுகளை நடுவதற்கு, உரிய உதவி செய்து கொடுப்பர். இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி கொண்டு, தங்கள் விவசாய நிலங்களில் விலை உயர்ந்த மரக்கன்றுகளை நடவு செய்ய முன்வர வேண்டும். மேலும், வனத் துறையினர் மரக் கன்றுகளை பராமரிக்க தேவையான ஆலோசனைகளையும் வழங்குவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வன அலுவலர் சரவணன், வனச்சரக அலுவலர்கள் செல்வகுமார், முரளிதரன்
உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X