ஆவணி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Added : செப் 16, 2022 | |
Advertisement
நாமக்கல்: ஆவணி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல், மோகனுார் முருகன் கோவில்களில், சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாமக்கல்-மோகனுார் சாலையில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், முக்கிய விசேஷ நாட்களில், சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடப்பது வழக்கம். அதேபோல், ஒவ்வொரு மாதமும், கிருத்திகை அன்று, சுவாமிக்கு அபிேஷகம்,


நாமக்கல்: ஆவணி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல், மோகனுார் முருகன் கோவில்களில், சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல்-மோகனுார் சாலையில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், முக்கிய விசேஷ நாட்களில், சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடப்பது வழக்கம். அதேபோல், ஒவ்வொரு மாதமும், கிருத்திகை அன்று, சுவாமிக்கு
அபிேஷகம், அலங்காரம் செய்யப்படுகிறது.
ஆவணி கிருத்திகையான நேற்று, காலை, 8:00 மணிக்கு, சுவாமிக்கு, பால், வெண்ணெய், நெய், தயிறு, திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் அபி ேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* மோகனுார் காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆவணி கிருத்திகையை முன்னிட்டு, காலை, 11:00 மணிக்கு, அபி ேஷகம், ஆராதனை நடந்தது. தங்க கவசத்தில் சுவாமி எழுந்தருளினார். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X