கொள்ளை அடிக்க முதல்வர் பச்சைக்கொடி தி.மு.க., மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

Added : செப் 16, 2022 | |
Advertisement
குமாரபாளையம்: ''கொள்ளை அடிக்க தமிழக முதல்வர் பச்சைக்கொடி காட்டுகிறார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் நடந்த, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழாவில், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் தங்கமணி பேசியதாவது: தி.மு.க.,வுக்கு ஏன் ஓட்டுப் போட்டோம் என்று மக்கள் நொந்து போயுள்ளனர். சொத்து


குமாரபாளையம்: ''கொள்ளை அடிக்க தமிழக முதல்வர் பச்சைக்கொடி காட்டுகிறார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் நடந்த, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழாவில், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
தி.மு.க.,வுக்கு ஏன் ஓட்டுப் போட்டோம் என்று மக்கள் நொந்து போயுள்ளனர். சொத்து வரி உயர்வுடன், தற்போது மின்கட்டணமும் உயர்ந்துள்ளது. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் மின் வெட்டும் இல்லை, மின்கட்டண உயர்வும் இல்லாமல், மக்கள் நிம்மதியாக இருந்தனர். இலவச பஸ் என்று சொல்லிவிட்டு, பாதி பஸ்களை நிறுத்தி விட்டனர். இதுதான் தி.மு.க., அரசின் சாதனை.
அடுத்தது பஸ்கட்டணம் உயரப்போகிறது. மதுரையைச் சேர்ந்த அமைச்சர், 100 கோடி செலவில், தன் மகன் திருமணத்தை நடத்தி உள்ளார். ஆட்சிக்கு வந்து,
ஒன்றரை ஆண்டுகள் தான் ஆகிறது. அந்த திருமணத்துக்கு முதல்வர் சென்று பாராட்டி வந்துள்ளார். இதன்மூலம் கொள்ளையடிக்க முதல்வரே பச்சைக்கொடி காட்டுவது தெரிகிறது.
வரும் எம்.பி., தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. மக்கள் கருத்தை கேட்காமல் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இதனால் ஏழை, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் மக்களோடு இருக்கும். விரைவில் தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X