9 நாளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் அக்கமாபேட்டையில் மேம்பாலம் கட்டக்கோரி தர்ணா

Added : செப் 16, 2022 | |
Advertisement
சங்ககிரி: அக்கமாபேட்டையில், 9 நாளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர், மேம்பாலம் கட்டக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், சங்ககிரி, அக்கமாபேட்டையில், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபுறம், அக்கமாபேட்டை அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி உள்ளன. அங்கு, சாலை மறுபுறத்தில் உள்ள அக்கமாபேட்டையை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்


சங்ககிரி: அக்கமாபேட்டையில், 9 நாளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர், மேம்பாலம் கட்டக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி, அக்கமாபேட்டையில், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபுறம், அக்கமாபேட்டை அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி உள்ளன. அங்கு, சாலை மறுபுறத்தில் உள்ள அக்கமாபேட்டையை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.
நெடுஞ்சாலை அமைத்தால் குடியிருப்பு பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்ல சாலையை கடக்க முயற்சிக்கும்போது, அதிவேக வாகனங்களால் விபத்து ஏற்படும் எனக்கூறி அக்கமாபேட்டை மக்கள், கடந்த, 5ம் தேதி முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. அத்துடன் மேம்பாலம் கட்டக்கோரி, முதல்வர், கலெக்டர், டி.ஆர்.ஓ., சங்ககிரி ஆர்.டி.ஓ., தாசில்தார், டி.எஸ்.பி., நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினர்.
ஆனால், நடவடிக்கை இல்லாததால், 9வது நாளாக நேற்றும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், அக்கமாபேட்டையில் உள்ள மாரியம்மன் கோவிலில், மாணவ, மாணவியர், பெறறோர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்ககிரி தாசில்தார் பானுமதி,
திருச்செங்கோடு - ஓமலுார் தேசிய நெடுஞ்சாலை திட்ட உதவி செயற்பொறியாளர் தாரகேஸ்வரன் பேச்சு நடத்தினர். அப்போது, அக்கமாபேட்டையில் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால், இனி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாக, மக்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X