தாதம்பட்டி கண்மாயில் குப்பை; பாழாகுது நீர்நிலை பருவமழைக்கு முன் தீர்வு காணப்படுமா

Added : செப் 16, 2022 | |
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் தாதம்பட்டி கண்மாயில் பாலிதின் குப்பை குவிந்துள்ளதால் நீர் தேங்கும் தன்மை கொண்ட இந்த கண்மாயும் பாழாகும் சூழல் உள்ளது. பருவமழைக்கு முன் உரிய தீர்வு காண வேண்டும்.விருதுநகர் ஒன்றியம் தாதம்பட்டி செல்லும் ரோட்டில் அக்கிராமத்திற்கு சொந்தமான கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் பாசனத்திற்கு பயன்பட்டு வரும் நிலையில் இதில் குப்பை கொட்டப்படுவதாக
தாதம்பட்டி கண்மாயில் குப்பை; பாழாகுது நீர்நிலை பருவமழைக்கு முன் தீர்வு காணப்படுமா



விருதுநகர் : விருதுநகரில் தாதம்பட்டி கண்மாயில் பாலிதின் குப்பை குவிந்துள்ளதால் நீர் தேங்கும் தன்மை கொண்ட இந்த கண்மாயும் பாழாகும் சூழல் உள்ளது. பருவமழைக்கு முன் உரிய தீர்வு காண வேண்டும்.

விருதுநகர் ஒன்றியம் தாதம்பட்டி செல்லும் ரோட்டில் அக்கிராமத்திற்கு சொந்தமான கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் பாசனத்திற்கு பயன்பட்டு வரும் நிலையில் இதில் குப்பை கொட்டப்படுவதாக நீண்ட நாள் புகார் உள்ளது.விருதுநகர் ஒன்றிய பகுதிகளில் ஒரு சில கண்மாய்களில் மட்டுமே நீர் தேங்குகிறது.
ஒண்டிப்புலிநாயக்கனுார், பாவாலி, ரோசல்பட்டி போன்ற கண்மாய்களில் நீர் தேங்குவதில்லை. இதனால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது சிவப்பு மண்டலத்தை எட்டி உள்ள நிலத்தடி நீர்மட்டம், வரும் ஆண்டுகளில் முற்றிலும் வற்ற கூட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் நீர் தேங்கும் தன்மை உள்ள நீர் ஆதாரங்களையாவது மாவட்ட, ஒன்றிய குழு நிர்வாகங்கள் பாதுகாக்க வேண்டும். 2021ல் பெய்த மழையால் தாதம்பட்டி கண்மாய் நிரம்பியது. தற்போது நீர் இருப்பு குறைந்துள்ள நிலையில் கண்மாயின் வெற்றிடங்களில் அருகில் உள்ள உள்ளாட்சிகளின் குப்பை கொட்டப்படுகின்றன. இவை பாலிதின் குப்பையாக இருப்பதால் கண்மாய் நாசமாக வாய்ப்புள்ளது.
பருவமழை பெய்தால் இவை கண்மாய் நீரில் கலந்து கண்மாயை பாழாக்கும். மேலும் தற்போது ஆங்காங்கே கருவேல மரங்கள் முளைத்து வருகின்றன. கண்மாயை சீராக ஆழப்படுத்தி இன்னும் அதிக தண்ணீர் தேங்கவும், கருவேல மரங்களை அகற்றவும், குப்பையை கொட்டும் உள்ளாட்சி அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X