குட்டீஸ்களை அசத்த... மொறு மொறு வெண்டைக்காய் ஃபிரை

Updated : செப் 16, 2022 | Added : செப் 16, 2022 | |
Advertisement
அடம்பிடிக்கும் குழந்தைகளை தினமும் சாப்பிட வைப்பதற்குள் பெற்றோருக்கு போதும் போதும் என்றாகிவிடும். சுவையான உணவுகளை பார்த்துப் பார்த்து செய்தாலும், பலன் என்னவோ பூஜ்ஜியம்தான். காய்கறிகளின் பக்கம் குழந்தைகளின் கண் பார்வை தப்பித் தவறிக்கூட விழாது. குறிப்பாக வெண்டைக்காய், பாகற்காய் என்றால் கண்டும் காணாமல் 'எஸ்கேப்' ஆகிவிடுவர். எனவே, அடம் பிடிக்கும் குழந்தைகளை
foodrecipes, food, recipes, ladies fingerfry, healthyfood, childrens, உணவு, ரெசிபி, வெண்டைக்காய், வெண்டைக்காய் ஃபிரை,

அடம்பிடிக்கும் குழந்தைகளை தினமும் சாப்பிட வைப்பதற்குள் பெற்றோருக்கு போதும் போதும் என்றாகிவிடும். சுவையான உணவுகளை பார்த்துப் பார்த்து செய்தாலும், பலன் என்னவோ பூஜ்ஜியம்தான். காய்கறிகளின் பக்கம் குழந்தைகளின் கண் பார்வை தப்பித் தவறிக்கூட விழாது. குறிப்பாக வெண்டைக்காய், பாகற்காய் என்றால் கண்டும் காணாமல் 'எஸ்கேப்' ஆகிவிடுவர். எனவே, அடம் பிடிக்கும் குழந்தைகளை அசத்த, மொறு மொறுப்பான வெண்டைக்காய் ஃபிரை செய்யும் வழிமுறையை பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:


வெண்டைக்காய் : 100 கிராம்

நிலக்கடலை : 2 டேபிள் ஸ்பூன்

தனியா : 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு : 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் : 2

எள் : 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் : 1 டீஸ்பூன்

சாட் மசாலா : 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா : 1/2 டீஸ்பூன்

சீரகத்தூள் : 1/2 டீஸ்பூன்

கடலை மாவு : 1/4 கப்

அரிசி மாவு : 1/4 கப்

எலுமிச்சை சாறு : 1 டீஸ்பூன்



latest tamil news





எப்படிச் செய்வது?


சூடான கடாயில் நிலக்கடலையை வறுக்கவும். பாதி வறுபட்டவுடன், கடலைப்பருப்பு, தனியா, சிவப்பு மிளகாய், எள் சேர்த்து மீண்டும் நன்றாக வறுக்கவும். ஆறியவுடன் மிக்சி ஜாரில் நைஸாக அரைக்கவும்.



latest tamil news



ஒரு பவுலில் மிளகாய்தூள், கரம் மசாலா, சாட் மசாலா, சீரகத்தூள், கடலை மாவு, அரிசி மாவு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்கவும். இதனுடன் அரைத்த நிலக்கடலை தூள் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பின், நீளவாக்கில் நான்காக வெட்டிய வெண்டைக்காய்களை சேர்த்து கிளறவும். தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை; வெண்டைக்காயில் உள்ள தண்ணீரே போதுமானது. ஈரப்பதத்துக்கு சிறிது எண்ணெயை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், அடுப்பை மிதமான தணலில் வைத்து, சிறிது சிறிதாக வெண்டைக்காய்களை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான, மொறு மொறுப்பான வெண்டைக்காய் ஃபிரை ரெடி. பார்ப்பதற்கு குர்குரே போன்று இருப்பதால், குட்டீஸ்களும் ஆர்வமுடன் விரும்பிச் சாப்பிடுவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X