பா.ஜ.,வில் இணைகிறார் அமரீந்தர் சிங்

Updated : செப் 17, 2022 | Added : செப் 16, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், வரும் திங்கட்கிழமை பா.ஜ.,வில் இணைய உள்ளார்.பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், சட்டசபை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பதவி விலகியதுடன், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி பா.ஜ.,உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் தோல்வி தான் கிடைத்தது. இதன்
CaptAmrinderSingh, BJP, Punjab, AmrinderSingh, captain,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், வரும் திங்கட்கிழமை பா.ஜ.,வில் இணைய உள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், சட்டசபை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பதவி விலகியதுடன், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி பா.ஜ.,உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் தோல்வி தான் கிடைத்தது.


latest tamil news



இதன் பின்னர் சிறிது காலம் ஓய்வில் இருந்த அமரீந்தர் சிங் சமீபத்தில், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். தேச பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக அமரீந்தர் சிங் கூறியிருந்தார்.

இந்நிலையில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரித்பால் சிங் பலியவால் கூறுகையில், வரும் திங்கட்கிழமை(செப்.,19) அமரீந்தர் சிங், தனது கட்சியை பா.ஜ., உடன் இணைத்து விட்டு, அக்கட்சியில் இணைய உள்ளதாக கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202211:12:35 IST Report Abuse
venugopal s வேறு எங்கு ?
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
16-செப்-202221:02:10 IST Report Abuse
Vijay D Ratnam கேப்டன் அமரீந்தர் சிங் இதை பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே செய்து இருக்கலாம்.
Rate this:
Democracy - Madurai,இந்தியா
17-செப்-202205:28:33 IST Report Abuse
Democracyபடுத்திட்டுகிட்டு போர்த்திக்கிறதுக்கு பதிலா சிங்கு போர்த்துக்கிட்டு படுத்திருக்கலாம்ன்னு சொல்றீங்க.. சின்ன ஜீ தாலாட்டு பாடிட்டாரு. மீளா தூக்கம் தான்,...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
16-செப்-202220:19:11 IST Report Abuse
Vena Suna அருமை.நல்ல முடிவு.இங்கே அடிமைகள் கிடையாது. முன்னேற்றம் உண்டு.
Rate this:
Democracy - Madurai,இந்தியா
17-செப்-202205:26:02 IST Report Abuse
Democracyஎல்லாம் மூளை சிறுத்த சூன்யங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X