இரட்டையர்களாக இரு பைக்குகளை களமிறக்கிய கீவே!| Dinamalar

இரட்டையர்களாக இரு பைக்குகளை களமிறக்கிய கீவே!

Updated : செப் 16, 2022 | Added : செப் 16, 2022 | |
கீவே நிறுவனத்தின் இரு புதுமுக பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கீவே நிறுவனம் இந்திய சந்தையில் கே300 என் மற்றும் கே300 ஆர் ஆகிய இரு இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இவை ட்வின் ரக பைக்குகளாகும். ஒரே மாதிரியான சிறப்பம்சங்களுடன் கூடிய பைக்காகும் ஆனால் தோற்றத்தில் மட்டும் மாறுபட்டதாக
Dinamalar, Automobiles, Keeway300N, Keeway300R, தினமலர், ஆட்டோமொபைல், கீவே300என், கீவே300ஆர்,

கீவே நிறுவனத்தின் இரு புதுமுக பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கீவே நிறுவனம் இந்திய சந்தையில் கே300 என் மற்றும் கே300 ஆர் ஆகிய இரு இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இவை ட்வின் ரக பைக்குகளாகும். ஒரே மாதிரியான சிறப்பம்சங்களுடன் கூடிய பைக்காகும் ஆனால் தோற்றத்தில் மட்டும் மாறுபட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இதில் கே300 என், நேக்கட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரக பைக்காகும். அதேபோல், கே300 ஆர் ஸ்போர்ட்ஸ் ரக பைக்காகும். தோற்றத்திலும் சற்றே மாறுபட்டாலும் இவ்விரு பைக்குகளிலும் ஒரே மாதிரியான அம்சங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, எஞ்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.



latest tamil news



அதே, 292.4 சிசி மோட்டாரே இந்த இரு பைக்குகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 27.1 பிஎச்பி பவரையும், 25 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.



latest tamil news



கே300 என் மேட் ஒயிட், மேட் சிவப்பு மற்றும் மேட் பிளாக் என மூன்று விதமான வண்ணங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அதேபோல், கே300 ஆர் குளாஸ்ஸி வெள்ளை, குளாஸ்ஸி சிவப்பு மற்றும் குளாஸ்ஸி பிளாக் ஷேட் ஆகிய நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.



latest tamil news



கே300 என் விலையை பொறுத்தவரை, மேட் ஒயிட்- ரூ.2,65,000 ஆகவும், மேட் ரெட் - ரூ.2,75,000 ஆகவும், மேட் பிளாக் ரூ.2,85,000 ஆகவும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கே 300 ஆர் விலை குளாஸ்ஸி ஒயிட்- ரூ.2,99,000 ஆகவும், குளாஸ்ஸி ரெட் ரூ.3,10,000 ஆகவும், குளாஸ்ஸி பிளாக் ரூ.3,20,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X