சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 16, 2022 | |
Advertisement
அறிவியல் ஆயிரம்ஆபத்தாகும் உடல் பருமன்உடல் பருமன் பிரச்னை உலகளவில் பெரிய பிரச்னையாக, குறிப்பாக குழந்தைகளிடம் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் 40 சதவீதம் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலகளவில் 1970ல் இருந்து மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. உலகில் 2030ம் ஆண்டுக்குள் ஒரு கோடி

அறிவியல் ஆயிரம்

ஆபத்தாகும் உடல் பருமன்


உடல் பருமன் பிரச்னை உலகளவில் பெரிய பிரச்னையாக, குறிப்பாக குழந்தைகளிடம் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் 40 சதவீதம் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலகளவில் 1970ல் இருந்து மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. உலகில் 2030ம் ஆண்டுக்குள் ஒரு கோடி பேர் உடல் பருமனால் பாதிக்கப்படுவர். இது உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய பாதிப்பு உட்பட பல உடல்நல பாதிப்புக்கு வழி வகுக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்

பாதுகாப்பான மருத்துவம்


பூமியில் உள்ள ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் உடல்நல குறைபாட்டுக்காக மருத்துவ உதவியை நாடியிருப்போம். நோயாளி பாதுகாப்பு பற்றி உலகளாவிய புரிதலை மேம்படுத்த, சுகாதார பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பை அதிகரிக்க வலியுறுத்தியும் உலக சுகாதார நிறுவனம் சார்பில் செப். 17ல் உலக நோயாளி பாதுகாப்பு தினம் கடைபிடிக்க படுகிறது. பாதுகாப்பற்ற மருத்துவம், மருந்துகளில் தவறு போன்றவை உலகளவில் சுகாதாரத்தில் தவிர்க்க கூடிய தீங்குகளுக்கு காரணமாக உள்ளது. 'தீங்கு விளை விக்காத மருந்து' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X