மருத்துவக் கல்லுாரிக்குபிரதமர் மோடி பெயர்

Added : செப் 16, 2022 | |
Advertisement
ஆமதாபாத்:குஜராத்தில், மருத்துவக் கல்லுாரி ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆமதாபாதில் மாநகராட்சிக்குச் சொந்தமான மருத்துவமனை உள்ளது. இதன் வளாகத்தில், ஒரு மருத்துவக் கல்லுாரி செயல்படுகிறது. இந்நிலையில், ஆமதாபாத் மாநகராட்சி கூட்டம் நேற்று

ஆமதாபாத்:குஜராத்தில், மருத்துவக் கல்லுாரி ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆமதாபாதில் மாநகராட்சிக்குச் சொந்தமான மருத்துவமனை உள்ளது. இதன் வளாகத்தில், ஒரு மருத்துவக் கல்லுாரி செயல்படுகிறது. இந்நிலையில், ஆமதாபாத் மாநகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், அதன் தலைவர் ஹிதேஷ் பரோத், ''மாநகராட்சி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மருத்துவக் கல்லுாரிக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படும்,'' என அறிவித்தார். கடந்த ஆண்டு, ஆமதாபாதில் கட்டப்பட்ட பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டதை அடுத்து, தற்போது மருத்துவக் கல்லுாரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X