மெரினா டூ கோவளம்; திரண்ட தன்னார்வலர்கள்

Updated : செப் 17, 2022 | Added : செப் 16, 2022 | |
Advertisement
சர்வதேச அளவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மூன்றாம் சனியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று (செப்., 17) சென்னை மெரினா முதல் கோவளம் வரை உள்ள கடற்கரை பகுதிகளில் இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று கடற்கரையை சுத்தப்படுத்தினர். கடல் சூழலை பிளாஸ்டிக்குகள் பாதிக்கின்றன என்று பல்வேறு ஆய்வுகளில்
CoastalCleanup, MarinaBeach, மெரினா, கடற்கரை

சர்வதேச அளவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மூன்றாம் சனியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று (செப்., 17) சென்னை மெரினா முதல் கோவளம் வரை உள்ள கடற்கரை பகுதிகளில் இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று கடற்கரையை சுத்தப்படுத்தினர்.



latest tamil news


கடல் சூழலை பிளாஸ்டிக்குகள் பாதிக்கின்றன என்று பல்வேறு ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். கடற்கரை ஒட்டிய பகுதிகளில் சேரும் குப்பைகள் கடலுக்குள் சேர்வதால் இது ஏற்படுகிறது. ஐ.நா.,வின் சுத்தமான கடற்கரை ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்துள்ளது. எனவே தூய்மையான கடல் என்கிற பிரசாரத்தில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நிலப் பகுதியில் மாசுபாடுகளை குறைத்தாலே கடலில் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை தடுக்க முடியும். அதன் ஒரு பகுதியாக தான் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கினை மத்திய அரசு தடை செய்துள்ளது. இருப்பினும் அவை வெளிப்படையாகவே பயன்பாட்டில் உள்ளன.



latest tamil news


இந்நிலையில் 'கம்யூனிட்ரீ' தன்னார்வ அமைப்பும், மத்திய அரசு நிறுவனங்களும் இணைந்து சென்னை கடற்பகுதியை பெரியளவில் சுத்தப்படுத்தும் பணியினை இன்று மேற்கொண்டனர். காலை 6 மணி முதல் 9 மணி வரை இந்நிகழ்வு நடந்தது.



latest tamil news


சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட் ஊழியர்கள், என்.ஜி.ஓ., என்.எஸ்.எஸ்., என்.சி.சி., லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 10,000 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.





புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X