ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது

Added : செப் 16, 2022 | |
Advertisement
சித்தாமூர்:சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நகர் நல அலுவலராக பியாரிபேகம், 57, என்பவர் பணியாற்றுகிறார்.இவர், அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு பரிந்துரை செய்ய, பொதுமக்களிடம் 500 முதல் 5,000 ரூபாய் வரை லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு இருந்தது.இந்நிலையில், சூணாம்பேடு அடுத்த வெண்ணாங்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மதியழகி, தமிழக அரசின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு
ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது

சித்தாமூர்:சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நகர் நல அலுவலராக பியாரிபேகம், 57, என்பவர் பணியாற்றுகிறார்.இவர், அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு பரிந்துரை செய்ய, பொதுமக்களிடம் 500 முதல் 5,000 ரூபாய் வரை லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு இருந்தது.

இந்நிலையில், சூணாம்பேடு அடுத்த வெண்ணாங்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மதியழகி, தமிழக அரசின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபாயை பெற விண்ணப்பித்தார்.விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய, நகர் நல அலுவலர் பியாரிபேகம், மதியழகியிடம் 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விரும்பாத அவர், செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.தொடர்ந்து, இப்பிரிவின் காவல் துணை கண்காணிப்பாளர் இமானுவேல் ஞானசேகரன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றனர்.போலீசாரால் வழங்கப்பட்ட, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மதியழகி கொடுத்தபோது, அதை வாங்கிய பியாரிபேகத்தை, கையும் களவுமாக போலீசார் பிடித்து கைது செய்தனர். உடல்நிலை காரணமாக அவர், ஜாமினில் விடப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X