ரூ.19 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைப்பு

Added : செப் 16, 2022 | |
Advertisement
உத்திரமேரூர்:காட்டாங்குளம் - -படூர் கிராமத்திற்கு இடையே, 19 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கப் பட்டது.உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காட்டாங்குளம் கிராமம். இப்பகுதியை சேர்ந்த காலனி மக்கள், அருகாமையில் உள்ள படூர் கிராமத்திற்கு சென்று வர சாலை வசதி இல்லை. இதனால், படூரில் உள்ள அரசு தொடக்க பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண்

உத்திரமேரூர்:காட்டாங்குளம் - -படூர் கிராமத்திற்கு இடையே, 19 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கப் பட்டது.

உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காட்டாங்குளம் கிராமம். இப்பகுதியை சேர்ந்த காலனி மக்கள், அருகாமையில் உள்ள படூர் கிராமத்திற்கு சென்று வர சாலை வசதி இல்லை. இதனால், படூரில் உள்ள அரசு தொடக்க பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகம், தபால் அலுவலகம் போன்ற இடங்களுக்கு செல்ல, தனியார் நிலங்களை பயன்படுத்தி, ஒத்தையடி பாதையில் சென்று வருகின்றனர்.

இதேபோல், காட்டங்குளத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகத்திற்கு, தனியார் நிலங்களையே படூர் மக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே, படூர் -- காட்டாங்குளம் இடையே சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இரு கிராமத்தின் இடையே, தனி நபர்களின் பட்டா நிலம் இருந்ததால், பாதை வசதி ஏற்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது.

இதையடுத்து, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் செல்வக்குமரன் ஆகியோரது கூட்டு முயற்சியால், கடந்த சில மாதங்களுக்கு முன் காட்டாங்குளம்- - படூர் ஆகிய இரு கிராமங்களின் இணைப்பாக மண் பாதை ஏற்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 19 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X