கிருஷ்ணாபுரம் அணையில் நீர் திறப்பு| Dinamalar

கிருஷ்ணாபுரம் அணையில் நீர் திறப்பு

Added : செப் 16, 2022 | |
பள்ளிப்பட்டு:கொசஸ்தலை ஆற்றின் நீராதாரமான கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து, நேற்று இரவு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆற்றுக்கு, ஆந்திர மாநிலம், கார்வேட்நகரம் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து நீர்வரத்து உள்ளது. நேற்று மாலை கார்வேட் நகரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து

பள்ளிப்பட்டு:கொசஸ்தலை ஆற்றின் நீராதாரமான கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து, நேற்று இரவு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆற்றுக்கு, ஆந்திர மாநிலம், கார்வேட்நகரம் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து நீர்வரத்து உள்ளது. நேற்று மாலை கார்வேட் நகரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து இரவு 7:00 மணியளவில், 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், கொசஸ்தலையில் வெள்ளம் பாய்ந்து வருகிறது. ஆறு மாதங்களுக்கு பின் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X