புதுபாலப்பட்டு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா

Added : செப் 16, 2022 | |
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது.சங்கராபுரம் ஒன்றியத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் 13 பள்ளிகளில் நேற்று துவங்கியது. புதுபாலப்பட்டு தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, திட்ட இயக்குனர்
புதுபாலப்பட்டு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது.

சங்கராபுரம் ஒன்றியத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் 13 பள்ளிகளில் நேற்று துவங்கியது. புதுபாலப்பட்டு தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, திட்ட இயக்குனர் மணி, ஒன்றிய சேர்மன்கள் கல்வராயன்மலை சந்திரன், சங்கராபுரம் திலகவதி நாகராஜன், சங்கராபுரம் நகர செயலாளர் தாகப்பிள்ளை, ஊராட்சி தலைவர் சாரதா சின்னையன் முன்னிலை வகித்தனர்.

உதயசூரியன் எம்.எல்.ஏ., காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், 'ஒன்று முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை பாதுகாக்கும் பொருட்டு முதல்வரின் காலை உணவு திட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது. கல்வராயன்மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளிகளில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கல்வராயன்மலைப் பகுதியில் இத்திட்டத்தின் மூலம் 937 மாணவர்கள் பயனடைவார்கள். காலை 8:15 மணி முதல் 8:50 மணி வரை உணவு வழங்கப்படும்' என்றார்.நிகழ்ச்சியில் ஒன்றிய துணைத் தலைவர் ஜாகீர், மாவட்ட கவுன்சிலர் அலமேலு சின்னதம்பி, வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, பள்ளி தலைமை ஆசி ரியர் உஷாராணி மற்றும் ஊர் முக்கி பிரமுகர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். கல்வராயன்மலை பி.டி.ஓ., அண்ணாதுரை நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X