தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தேசிய பொறியாளர் தின விழா

Added : செப் 16, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தேசிய பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது.பொறியாளர் பாரத் ரத்னா விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 15ம் தேதி, தேசிய பொறியாளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தேசிய பொறியாளர் தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.விழாவை முன்னிட்டு,
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தேசிய பொறியாளர் தின விழா

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தேசிய பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

பொறியாளர் பாரத் ரத்னா விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 15ம் தேதி, தேசிய பொறியாளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தேசிய பொறியாளர் தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.விழாவை முன்னிட்டு, 'சிறப்பான உலகிற்கு சிறந்த பொறியாளர்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. சிவில் பொறியியல் பிரிவு தலைவர் பழனிவேல் வரவேற்றார். பேராசிரியர் சரவணன் நோக்க உரையாற்றினார்.

விழாவில் புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமூக வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ரமேஷிற்கு பல்கலைக்கழகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பொறியாளர் குமார் நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X