122 ஆண்டு பழமையான பண்ணை இடமாற்றம்

Added : செப் 16, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:கல்லாறில், 122 ஆண்டுகள் பழமையான அரசு தோட்டக்கலை பண்ணையை இடமாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்- அருகே கல்லாறில் மலைகளுக்கு இடையே, 25 ஏக்கர் பரப்பளவில் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. ஆங்கிலேயரால், 1900ம் ஆண்டு அமைக்கப்பட்ட இப்பண்ணையில், பழங்களின் ராணி என்றழைக்கப்படும்
122 ஆண்டு பழமையான பண்ணை இடமாற்றம்

மேட்டுப்பாளையம்:கல்லாறில், 122 ஆண்டுகள் பழமையான அரசு தோட்டக்கலை பண்ணையை இடமாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்- அருகே கல்லாறில் மலைகளுக்கு இடையே, 25 ஏக்கர் பரப்பளவில் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. ஆங்கிலேயரால், 1900ம் ஆண்டு அமைக்கப்பட்ட இப்பண்ணையில், பழங்களின் ராணி என்றழைக்கப்படும் மங்குஸ்தான் மற்றும் துரியன், லிட்சி, ரம்புட்டான் என அரிய வகை பழ மரங்களும், வாசனை திரவிய செடிகளும் உள்ளன.இங்குள்ள, 2,300 மரங்களில், 500க்கும் மேற்பட்டவை நுாறாண்டு பழமையானது.
தாவரவியல் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி கூடமாகவும் விளங்கும் இப்பண்ணையில், தோட்டக்கலை அலுவலர், உதவி அலுவலர் என, 16 பேர் நிரந்தரமாகவும், 25 பேர் தற்காலிகமாகவும் பணிபுரிகின்றனர்.பண்ணைக்கு வரும் சுற்றுலா பயணிகளால் ஆண்டுக்கு, 55 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.
இந்நிலையில், யானைகளின் வழித்தடத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த மாதம் ஆய்வு செய்தது. தொடர்ந்து, யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள இப்பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றும்படி அரசு தோட்டக்கலை துறைக்கு கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள் கூறுகையில்,'இப்பண்ணையில் தரமான மர நாற்றுகள் உற்பத்தி செய்து, குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
வேறு இடத்துக்கு பண்ணையை மாற்றும்போது சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தரமான நாற்றுகள் உற்பத்தியாகுமா என்பது சந்தேகம்தான். எனவே, அதே இடத்தில் பண்ணை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.பழமை வாய்ந்த பண்ணை என்பதால், இந்த இடத்தை அரசு நினைவுச் சின்னமாக அறிவித்து, இங்குள்ள மரங்களை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்பது சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பும்கூட.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X