போலீஸ் டைரி...: திருவள்ளூர்

Added : செப் 16, 2022 | |
Advertisement
திருவிழாவில் மோதல்: இருவர் காயம்திருவள்ளூர்: திருவள்ளூர் வேம்புலியம்மன் கோவிலில் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. உற்சவர் அம்மன் திருவீதியுலா வின் போது திருவள்ளூர் முகமதுஅலி தெருவைச் சேர்ந்த பார்த்தசாரதி, 37 என்பவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 31 என்பவருக்கும் இடையே யார் முதலில் ஆரத்தி எடுப்பது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இரு

திருவிழாவில் மோதல்: இருவர் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வேம்புலியம்மன் கோவிலில் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. உற்சவர் அம்மன் திருவீதியுலா வின் போது திருவள்ளூர் முகமதுஅலி தெருவைச் சேர்ந்த பார்த்தசாரதி, 37 என்பவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 31 என்பவருக்கும் இடையே யார் முதலில் ஆரத்தி எடுப்பது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் தங்களது ஆதரவாளர்களுடன் மோதிக் கொண்டனர். இதில் பார்த்தசாரதி, சந்தோஷ்குமார் பலத்த காயம் அடைந்தனர். இரு தரப்பினர் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மீது திருவள்ளூர் டவுன் போலீசார், பத்து பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாலிபர் தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த விடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு ,38. இவருக்கு திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அன்பரசு நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறையில் மின் விசிறியில் துாக்கிட்டுக் கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர் அன்பரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கல்லுாரி மாணவி மாயம்

திருத்தணி: திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்த, 19 வயது கல்லுாரி மாணவி ஒருவர் ஆற்காடு பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லுாரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை கல்லுாரிக்கு சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று திருத்தணி போலீசில் அவரது தாய் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X