ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

Added : செப் 16, 2022 | |
Advertisement
ஒகேனக்கல்:கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்காவிரியாற்றில் நீர் வரத்து, சரிந்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்ததால், கர்நாடகாவிலுள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.இதனால், கபினியிலிருந்து வினாடிக்கு, 5,000 கன அடியும், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து வினாடிக்கு, 28
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல்:கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்காவிரியாற்றில் நீர் வரத்து, சரிந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்ததால், கர்நாடகாவிலுள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.இதனால், கபினியிலிருந்து வினாடிக்கு, 5,000 கன அடியும், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து வினாடிக்கு, 28 ஆயிரத்து, 393 கன அடி என, மொத்தம், 33 ஆயிரத்து, 393 கன அடி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, 48 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்து வருகிறது.
இருப்பினும், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.நீர்வரத்து அதிகரிப்பால், காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை தொடர்கிறது. நீர்வரத்தை தொடர்ந்து, பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X