மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : செப் 16, 2022 | |
Advertisement
உடுமலை;மின் கட்டண உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், உடுமலை, மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அ.தி.மு.க., திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.அவர் பேசுகையில், ''மின் கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து
மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உடுமலை;மின் கட்டண உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், உடுமலை, மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அ.தி.மு.க., திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.அவர் பேசுகையில், ''மின் கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர். விலையில்லா ஆடு, மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்குதல், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. மேலும், உடுமலை புக்குளத்தில், குடிசை மாற்று வாரியத்தால், ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை, இன்னும் ஒதுக்கீடு செய்யாமல், தி.மு.க., அரசு அலட்சியமாக இருக்கிறது. இத்தகைய ஆட்சியால், மக்கள் வேதனைப்பட்டு வருகின்றனர்,'' என்றார்.பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன் முன்னிலை வகித்தார்.


மடத்துக்குளம்


திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியத்தைச்சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X