'டாஸ்மாக்' பணியில் அலைக்கழிப்பு டவரில் ஏறி ஊழியர் போராட்டம்

Added : செப் 16, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை:சீர்காழி அருகே ஒரே இடத்தில் பணி வழங்காமல் அலைக்கழித்ததால் மனமுடைந்த 'டாஸ்மாக்' ஊழியர் மொபைல் போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தெற்கு விநாயகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 41; டாஸ்மாக் விற்பனையாளர். மனைவி விஜி, 36, மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சுரேஷ் பணியாற்றி வந்த புத்துார்
'டாஸ்மாக்' பணியில் அலைக்கழிப்பு டவரில் ஏறி ஊழியர் போராட்டம்

மயிலாடுதுறை:சீர்காழி அருகே ஒரே இடத்தில் பணி வழங்காமல் அலைக்கழித்ததால் மனமுடைந்த 'டாஸ்மாக்' ஊழியர் மொபைல் போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தெற்கு விநாயகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 41; டாஸ்மாக் விற்பனையாளர். மனைவி விஜி, 36, மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சுரேஷ் பணியாற்றி வந்த புத்துார் டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சுரேஷ் திருநன்றியூர் டாஸ்மாக் கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கும் கண்காணிப்பாளருடன் பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, மீண்டும் சுரேஷ் அடுத்தடுத்து காத்திருப்பு, புதுப்பட்டினம் டாஸ்மாக் கடைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு உள்ளார். மனமுடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் மதியம், சேந்தங்குடி ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி தனக்கு நிரந்தர பணியிடம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
சீர்காழி டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையிலான போலீசார் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் டவரில் இருந்து சுரேஷ் கீழே இறங்கினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X