சரிவு கண்ட பி.எஸ்.என்.எல்.,

Added : செப் 16, 2022 | |
Advertisement
சென்னை:தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் முறையாக சேவை வழங்காததால், ஜூலை மாதத்தில் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 2.4 லட்சமும், நாடு முழுதும் 8.19 லட்சமும் சரிந்துள்ளது.இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்துவோரின் விபரங்களை, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' மாதம்தோறும் வெளியிடும். தற்போது, ஜூலை மாதத்திற்கான விபரங்கள் வெளியிடப்பட்டு

சென்னை:தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் முறையாக சேவை வழங்காததால், ஜூலை மாதத்தில் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 2.4 லட்சமும், நாடு முழுதும் 8.19 லட்சமும் சரிந்துள்ளது.

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்துவோரின் விபரங்களை, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' மாதம்தோறும் வெளியிடும். தற்போது, ஜூலை மாதத்திற்கான விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.அதன்படி, தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் மாதத்தில், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சேவை பயன்டுத்துவோரின் எண்ணிக்கை, 98.51 லட்சமாக இருந்தது. இது, ஜூலை மாதம் 96.11 லட்சமாக குறைந்து உள்ளது. இதன்படி, ஜூலை மாதத்தில் மட்டும், 2.4 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., சேவையில் இருந்து வெளியேறி உள்ளனர்.

தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திரா, கேரளா, புதுடில்லி, உத்தரபிரதேசம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் எண்ணிக்கை சரிந்துள்ளது.நாடு முழுதும், 8.19 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறி உள்ளனர். பி.எஸ்.என்.எல்., 'பிராட்பேண்ட்' சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2.52 கோடியாக உள்ளதாக, 'டிராய்' தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X