உடுமலையில் ஆசிரியர்களுக்குவழிகாட்டி பயிற்சி முகாம் 

Added : செப் 16, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம், நகராட்சி பள்ளியில் நடந்தது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு விரைவில் நடத்தப்படவுள்ளது.இந்த மாநாட்டில் மாணவ, மாணவியரை பங்கேற்க செய்யும் செய்யும் வகையில் பள்ளிகள் தோறும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.அந்த வரிசையில் உடுமலை கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கான
உடுமலையில் ஆசிரியர்களுக்குவழிகாட்டி பயிற்சி முகாம் 

உடுமலை:உடுமலை கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம், நகராட்சி பள்ளியில் நடந்தது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு விரைவில் நடத்தப்படவுள்ளது.இந்த மாநாட்டில் மாணவ, மாணவியரை பங்கேற்க செய்யும் செய்யும் வகையில் பள்ளிகள் தோறும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.அந்த வரிசையில் உடுமலை கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம், பார்க் ரோடு நகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், 10 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள், தங்களை சுற்றியுள்ள சூழலியல் பிரச்னைகளை உற்று நோக்கி ஆய்வு செய்து, அதன் முடிவை நவ., மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.பங்கேற்க விரும்புவோர், tnsf.co.in என்ற இணையதள முகவரி வாயிலாக பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டது.இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச்செயலாளர் தியாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், மாவட்ட பொருளாளர் கார்த்திக், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், மாவட்ட தலைவர் செல்லதுரை, தன்னார்வலர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை, உடுமலை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரசாமி செய்திருந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X