சின்ன சின்னதாய்

Added : செப் 16, 2022 | |
Advertisement
கழிப்பறையில் சிறுவன் மீட்புபங்கார்பேட்டையின் ஹாரோஹள்ளி கிராம அங்கன்வாடி மையத்தில் கழிப்பறைக்கு சென்ற நான்கு வயது சிறுவனை கவனிக்காத ஊழியர், அங்கன்வாடிக்கு பூட்டுப் போட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். கழிப்பறையை விட்டு வெளியே வந்த சிறுவன் அழுது கூச்சல் போட்டதால், அக்கம் பக்கத்தினர் பூட்டை உடைத்து திறந்து சிறுவனை மீட்டனர்.இதுகுறித்து அங்கன்வாடி
சின்ன சின்னதாய்


கழிப்பறையில் சிறுவன் மீட்பு



பங்கார்பேட்டையின் ஹாரோஹள்ளி கிராம அங்கன்வாடி மையத்தில் கழிப்பறைக்கு சென்ற நான்கு வயது சிறுவனை கவனிக்காத ஊழியர், அங்கன்வாடிக்கு பூட்டுப் போட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். கழிப்பறையை விட்டு வெளியே வந்த சிறுவன் அழுது கூச்சல் போட்டதால், அக்கம் பக்கத்தினர் பூட்டை உடைத்து திறந்து சிறுவனை மீட்டனர்.இதுகுறித்து அங்கன்வாடி திட்டஅதிகாரிக்கு புகார் செய்தனர். அங்கன்வாடி ஊழயரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென தாசில்தாரிடம் புகார் செய்துள்ளனர்.


மூத்த காங்., தலைவர் மறைவு


தங்கவயல் மூத்த காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், 88, நேற்று மாலை காலமானார்.பெமல் தொழிற்சாலையில் ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர்; தங்கவயல் தொகுதிகாங்கிரஸ் வேட்பாளராக இருமுறை போட்டி யிட்டவர்.இவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய முன்னாள் பிரதமர் இந்திரா தங்கவயலுக்கு வந்திருந்தார். வயது முதிர்ச்சியால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று காலமானார்.இவரது உடல் ஹென்றீஸ் வட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டது. பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.


லாரி மீது பஸ் மோதல்


பங்கார்பேட்டை- - தங்கவயல் சாலையில் உள்ள இந்திரா நகரில் நின்றிருந்த லாரி மீது தனியார் பஸ் மோதியது. இதில் பஸ்சில் இருந்த 30 பயணியர் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த விபத்தில் ஆடு ஒன்று பலியானது.


பா.ஜ.,வினர் ரத்த தானம்


பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தங்கவயல்நகர பா.ஜ., சார்பில் இன்று ரத்ததான முகாம் நடக்கிறது.ராபர்ட்சன் பேட்டை கிங் ஜார்ஜ் அரங்கில் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ரத்த தான முகாம் நடக்கிறது.நுாற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்ய, பெயர் பதிவு செய்துள்ளனர். நகர பா.ஜ., தலைவர் கமல் நாதன் தலைமையில்ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


ஹோட்டல்களில் சேவை கட்டணம்


கோலார் மாவட்டத்தில் ஹோட்டல்களில் உணவு சப்ளை செய்வதுடன் சேவை கட்டணம் என தனியாக வசூலிப்பது குறித்து கோலார் மாவட்ட கலெக்டர் வெங்கட் ராஜுகவனத்துக்கு வந்துள்ளது.இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஹோட்டல்களில் உணவு, சிற்றுண்டி விலைகள் அதிகரித்து உள்ளன என பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளது. இதனுடன் சேவை கட்டணம் வேறு தனியாக வசூலிப்பதாகவும் புகார் வந்துள்ளது.இது சட்டப்படி குற்றமாகும். சேவை கட்டணம் வசூலிக்கும் ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


சட்ட விரோத காஸ் ரீ பில்லிங்


கோலார் ரஹ்மத் நகரில் சட்ட விரோதமாக கேஸ் ரீ பில்லிங் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கோலார் நகர போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பயாஸ், 45, என்பவர், ஆட்டோக்களுக்கு சட்ட விரோதமாக காஸ் ரீ பில்லிங் செய்து வருவது தெரிய வந்தது. குடோன் ஒன்றில் 50 காஸ் சிலிண்டர்கள் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டன.


கடிகாரம் எங்கே?


கோலார் மணிக் கூண்டு மீது தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேச பக்தியை நிலைநாட்டினர். மணிக் கூண்டு மைசூரு மகாராஜா சாமராஜ உடையார் காலத்தில் நிறுவப்பட்டது.இந்த மணிக் கூண்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதே தவிர அதில் நேரத்தை காட்டும் கடிகாரம் இருந்ததை அகற்றினரே தவிர, இன்னும் கடிகாரத்தை அமைக்க வில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X