பிச்சை எடுப்போருக்கு கடிவாளம்மேலவையில் அமைச்சர் தகவல்

Added : செப் 16, 2022 | |
Advertisement
பெங்களூரு-“பெங்களூரில் குழந்தையை வைத்து கொண்டு பிச்சை எடுப்பது மூன்று மாதத்தில் கட்டுப்படுத்தப்படும்,” என சமூக நலத்துறை அமைச்சர் சீனிவாச பூஜாரி கூறினார்.கர்நாடகா சட்ட மேலவையில் சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி கூறியதாவது:பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் தோளில் குழந்தையை கட்டி கொண்டு பிச்சை எடுக்கின்றனர். வேறு ஒருவர் குழந்தையை கொண்டு
பிச்சை எடுப்போருக்கு கடிவாளம்மேலவையில் அமைச்சர் தகவல்

பெங்களூரு-“பெங்களூரில் குழந்தையை வைத்து கொண்டு பிச்சை எடுப்பது மூன்று மாதத்தில் கட்டுப்படுத்தப்படும்,” என சமூக நலத்துறை அமைச்சர் சீனிவாச பூஜாரி கூறினார்.

கர்நாடகா சட்ட மேலவையில் சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி கூறியதாவது:பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் தோளில் குழந்தையை கட்டி கொண்டு பிச்சை எடுக்கின்றனர். வேறு ஒருவர் குழந்தையை கொண்டு வந்து, அதற்கு மயக்க மருந்து தெளித்து பிச்சை எடுப்பது சமீப காலமாக அதிகரிக்கிறது. இதை தடுக்க அரசு முன்வந்துள்ளது.பெங்களூரு நகரில் வாகன நெருக்கடி, சிக்னல்களில் பிச்சை எடுப்பது அதிகரிக்கிறது. மூன்று மாதங்களில் கட்டுப்படுத்தப்படும்.

கர்நாடக பிச்சை தடுப்பு சட்டம் - 1975ன் கீழ் மாநிலத்தில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 16 வயதுக்குட்பட்ட ஆண்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டு, மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.திருநங்கைகள் பிச்சை எடுப்பது என்ற பெயரில் சிறு சிறு தொந்தரவு செய்கின்றனர். இதற்கு கடிவாளம் போடப்படும். பிச்சை எடுத்ததாக நடப்பாண்டில், ஆகஸ்ட் வரை 2,674 ஆண்கள், 394 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X