திருப்பூருக்கு தி.மு.க., ஒரு தோஷம் பொள்ளாச்சி ஜெயராமன் காட்டம்| Dinamalar

திருப்பூருக்கு தி.மு.க., ஒரு தோஷம் பொள்ளாச்சி ஜெயராமன் காட்டம்

Added : செப் 16, 2022 | |
திருப்பூர்:''திருப்பூருக்கு தி.மு.க., ஒரு தோஷம்,'' என, அ.தி.மு.க., மாவட்ட செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் குமரன் சிலை முன், அ.தி.மு.க., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: விலைவாசி, மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை மூடி மறைப்பதற்காக, வேலுமணி உட்பட
திருப்பூருக்கு தி.மு.க., ஒரு தோஷம் பொள்ளாச்சி ஜெயராமன் காட்டம்

திருப்பூர்:''திருப்பூருக்கு தி.மு.க., ஒரு தோஷம்,'' என, அ.தி.மு.க., மாவட்ட செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் குமரன் சிலை முன், அ.தி.மு.க., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: விலைவாசி, மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை மூடி மறைப்பதற்காக, வேலுமணி உட்பட முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், 'ரெய்டு' நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே, அதே இலங்கையை விட்டு குடும்பத்தினருடன் தப்பி ஓடினார். வரிகளை உயர்த்தி, தமிழக மக்களை வஞ்சிக்கும் தி.மு.க.,வுக்கும், இதே நிலை தான் ஏற்படும்.தி.மு.க., எப்போது ஆட்சிக்கு வந்தாலும், திருப்பூர் நாசமாகி விடுகிறது.
திருப்பூருக்கு தி.மு.க., ஒரு தோஷம். கடந்த, 2010 ல் தி.மு.க., ஆட்சியில் தான், சாய ஆலைகள் மூடப்பட்டு, பின்னலாடை உற்பத்தி துறை முடங்கியது. பின், 2011ல் முதல்வராக வந்த ஜெயலலிதா, 213 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கி, தொழிலை மீட்டுத் தந்தார்.

பஞ்சு, நுால் விலை உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்துவரி, வீட்டு வரி உயர்வால் ஏற்கனவே திருப்பூர் பின்னலாடை துறை தத்தளிக்கிறது. தற்போது, மின் கட்டண உயர்வால், தொழில் செய்ய முடியாத நிலைக்கு பின்னலாடை உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

நான்காவது குடிநீர் திட்டத்துக்காக, பழனிசாமி ஆட்சி காலத்தில், 1,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஓராண்டுக்கு முன் நிறைவேற வேண்டிய திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர். வளர்ச்சிப் பணிகளை செய்யாவிடில், மாவட்டம் முழுதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X